Header Ads



எதிர்பார்த்ததை போன்று அமோக வெற்றி - அமைதியாக கொண்டாட வேண்டும்

எதிர்பார்த்ததை போன்று ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது.   கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியினை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாறுப்பட்ட வழிமுறைகளில்  பல்வேறு  நெருக்கடிகள்  ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆரம்பத்தில் இருந்து உதவி வழங்கியவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.

அச்சமின்றிய விதத்தில் அனைவரும் தேசிய பாதுகாப்புடன் வாழும் சூழல் இனி தோற்றுவிக்கப்படும். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள  கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அதற்காக  செயற்பாடுவார் என்றும் வெற்றியினை அடைவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தொடர்ந்து அவசியமாக காணப்படுகின்றதென்றும் அவர் மேலும்  தெரிவித்தார். 

அத்தோடு கடந்த காலங்களில் நாட்டில் இருண்ட யுகம் காணப்பட்டது. குறிப்பட்ட தரப்பினர் மாத்திரமல்லாமல் அனைவரும் அனைத்து விடயங்களிலும் முன்னேற்றமடைவதற்கான  வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம் என்றார். 

பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. 

No comments

Powered by Blogger.