Header Ads



ரணில், சஜித், கோட்டா எழுத்துமூலம் உறுதி - தேரரின் உண்ணாவிரதம் நின்றுபோனது


MCC ஒப்பந்தம் கைச்சாத்திடபடுவதற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த உடுதும்பர காசியப்ப தேரர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். 

குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட போவது இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் எழுத்து மூலம் வழங்கிய உறுதி மொழிக்கு அமையவே அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார். 

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உடுதும்பர காசியப்ப தேரர் நேற்று (05) இந்த சாகும் வரையான குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடதக்கது.

4 comments:

  1. உண்மையிலே காசுக்காக நாட்டை விற்பது தவறு. அமெரிக்கர்கள் சும்மா 450 மில்லியன் டொலர் தரமாட்டார்கள். இதன் பின்னணியில் அவர்களுடைய பலமான எதிர்பார்ப்புக்கள் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

    ReplyDelete
  2. இது கொஞ்சம் பரவாயில்லை.

    ReplyDelete
  3. This country will burn and destroy by recism hamuduru.

    ReplyDelete
  4. முதன்முதலில் நியாயமான கோரிக்கைகளுக்கு உண்ணாவிரதம் நம் நாட்டு தேரர்களை பாராட்டியே ஆக வேணும் ஆ.. ஊ.. ன்னா உண்ணாவிரதம் -
    மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.