Header Ads



அநுரகுமார விடுத்துள்ள அறிவிப்பு

2019ம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்துள்ளது. அதன் பெறுபேறுகளுக்கமைய இம்முறை கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றியடைந்துள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் எமக்கு கிடைத்த வாக்குகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் திருப்தியடைய முடியாது. நாம் இதனை விடவும் கூடுதலான வாக்குகளை எதிர்பார்த்த போதிலும், அதனை பெற முடியாமல் போனமையை ஏற்றுக்கொள்கிறோம்.
இருந்த போதிலும் நாட்டினதும், மக்களினதும் எதிர்கால வெற்றிக்காக போராடும் தேசிய மக்கள் சக்தி
எனப்படும் பரந்த ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி மற்றும் உண்மையான தேசப்பற்றுள்ள முகாமை அதாவது,
பரந்த மக்கள் இயக்கத்தின் ஆரம்பத்தை வெளிப்படுத்துவதில் இந்த ஜனாதிபதி தேர்தல் ஊடாக வெற்றியடைந்துள்ளோம்.
அத்துடன் இலங்கையின் அரசியல் தேர்தல் மேடைகளில் இடம்பெறும் ஒருவர் மீது
இன்னொருவர் வசை பாடுதல், பண்பற்ற வசனங்களை பேசுதல், சில்லறை வாக்குறுதிகளை பெருமளவில் வழங்குதல்
போன்றவற்றுக்கு பதிலாக நாட்டில் ஆழமான கொள்கை சார் விவாதத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த
விவாதங்கள் மூலம் பல விடயங்களை நாட்டில் அறிமுகப்படுத்த முடிந்தமை நாம் பெற்ற நீண்டகால அரசியல்
வெற்றியாகும்.
ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் சில கட்சிகள் இனவாதத்தை தூண்டிவிடும் போது, பல்வேறு இனத்தவர்களையும் ஒருவர்
மீது அடுத்தவர் அச்சம் கொள்ள செய்து வாக்குகளை பெற்றுக்கொள்ள முன்று கொண்டிருக்கும் போது,
இனவாதமற்ற அரசியல் மற்றும் தேசிய ஐக்கியத்துடனான தேர்தல் மேடையை எம்மால் அமைக்க முடிந்துள்ளது.
அதனையும் எதிர்காலத்துக்கான சாதகமான விடயமாக பார்க்கிறோம்.
ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரத்தை பார்க்கும் போது வடக்கு மக்கள் மத்தியிலும், தெற்கு மக்கள் மத்தியிலும்
உருவாக்கப்பட்ட அச்சத்தை பாவித்து மக்கள் கருத்தை தவறாக வழிநடத்தி, மக்களின் வாக்குகளை பெறுவதில் இரண்டு
பிரதான கட்சிகளும் செயற்பட்டமை தெளிவானதாகும்.
அந்த நிலையில் கொள்கை ரீதியான விவாதம் மூலம் மக்களை தெளிவுபடுத்தி வாக்குகளை பெற நாம் எடுத்த முயற்சி வெற்றி பெற முடியாமற் போனது தெளிவாகிறது.
எவ்வாறு இருப்பினும் இந்த தேர்தல் பெறுபேற்றின் மூலம் வெற்றி பெற்றோர், தமது வெற்றி தொடர்பில் புழகாங்கிதமடைந்து மகிழ்ந்திருந்தாலும், மக்களின் பக்கமாக பார்க்கும் போது இதன் போது மக்கள் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகிறது. ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாட்டில் நிலவும் மிகவும் மோசமான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார நெருக்கடிகளுக்கு தீர்வு இல்லை.
எனவே பழைய 71 ஆண்டுகால புழித்துப்போன சிரமமான வாழ்க்கையே மக்களுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும் மக்கள் வெற்றி பெறவில்லை எனவும், எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் மக்கள் விரைவாக புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறோம். அந்த மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் நாம் எமது பொறுப்பையும், செயற்பாடுகளையும்
கைவிடாமல் தொடர்ந்து ஆற்றுவோம் என உறுதி கூறுகிறோம்.
நிறைவாக இந்த ஜனாதிபதி தேர்தல் முழுவதும் எம்முடன் ஒத்துழைத்து கைகோர்த்த அனைவருக்கும், எந்தவொரு குறுகிய அரசியல் லாப எதிர்பார்ப்பும் இன்றி பல்வேறு வகைகளிலும் எமக்கு உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளை
உரித்தாக்குகிறோம். மக்கள் முன் வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகள் தோற்க முடியாதவை எனவும், அவற்றை வெற்றி
பெற செய்வதற்காக நாம் சளைக்காமல் போராடுவோம் எனவும் மீண்டும் உறுதி கூறுகிறோம்.
தேசிய மக்கள் சக்தி
2019.11.17

1 comment:

Powered by Blogger.