Header Ads



சஜித்துக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைக்க, ரணில் வழிவிட வேண்டும் - சம்பந்தன் அறிவிப்பு

“சஜித் பிரமேதஸ என்பவர் நாட்டில் தெரிவான இளம் தலைவர். அவர் மக்களின் வாக்குகளைப் பெற்ற ஒருவர். எனவே முன்னாள் பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, சஜித்துக்கு வழிவிட்டு, அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு இடமளிக்க வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான இரா.சம்பந்தன், அதேவே, ஜனநாயக மரபாகும் என்றும் வலியுறுத்தினார்.   

எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தற்போதைய அரசாங்கத்தின் நிலைவரம் குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,  

நாட்டில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள்  தொடர்பாக, தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு தனது முடிவை,  ஜனநாயக ரீதியாக எதிர்காலத்தில் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“நாம் யாரையும் ஆளமாக ஆதரிக்கவில்லை. தேர்தலில் நின்ற இரு பகுதியினருடனும் தொடர்புகளை வைத்திருந்தோம். எமது மக்களின் நிலைமைக் குறித்து பேசினோம். எமது மக்களின் நீண்டகால கோரிக்கைத் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட நிலைப்பாடு குறித்து எமது மக்களிடம் நாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மக்கள் இம்முறை ஒருங்கிணைந்து அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

“எமது எதிர்கால நிலைப்பாடு குறித்து, ஜனநாயக ரீதியான முடிவுகளை நாம் எடுக்கவுள்ளோம். எமது மக்களைப் பொறுத்தளவில், நடந்து முடிந்தத் தேர்தலில் ஒற்றுமையாக வாக்களித்துள்ளனர். அவர்களிடத்தில் ஒற்றுமை மேம்பட்டதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

“எதிர்காலத்திலும் மக்கள் ஓரணியாக நின்றுச் செயற்படவேண்டும். அதன்மூலம் தமது நிலைப்பாட்டை உறுதி செய்யவேண்டும். மக்கள் ஒன்றுபட்டு தக்களது உரிமைசார்ந்த கோரிக்கை தொடர்பாக ஓரணியாக நிற்கின்றார்கள் என்பதை, சர்வதேசம் அறிவதுடன், அவர்கள் ஜனநாயக முடிவுகளுக்கான ஆதரவையும் வழங்க முன்வருவார்கள்” எனத் தெரிவித்தார்.

பொன்ஆனந்தம்

No comments

Powered by Blogger.