Header Ads



எந்தவொரு நிபந்தனையுடனும், சஜித்திற்கு ஆதரவு வழங்கவில்லை - சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி எடுத்த தீர்மானத்தின் பின்னணி குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எந்தவொரு நிபந்தனையுடனும் சஜித்திற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும், அவருடைய கொள்கை பிரகடனத்தை ஆராய்ந்த பின்னரே இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு வழங்க முடிவு எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் குழுவினால் சமர்ப்பித்த 13 அம்சங்கள் அடங்கிய யோசனை, தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டவை அல்லவென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் யோசனை தொடர்பில் எந்தவொரு வேட்பாளருடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை எனவும், அந்த 13 கோரிக்கைகளுக்கும் தங்கள் தீர்மானத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 13 யோசனைகளுக்கு சஜித் இணக்கம் வெளியிட்டாரா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கோரிக்கைகள் தொடர்பில் நாங்கள் எதுவும் பேசவில்லை. அதனை யாரிடமும் சமர்ப்பிக்கவும் இல்லை. அந்த கோரிக்கைகள் ஊடகங்களில் வெளியாகியதனை தொடர்ந்து அதனை பார்க்கவே மாட்டோம் என ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறினார்கள். அதனால் நாங்கள் அது தொடர்பில் எந்த நடவடிக்கையுயம் மேற்கொள்ளவில்லை.

நாங்கள் இரண்டு வேட்பாளர்களினதும் கொள்கை பிரகடனத்தையும் ஆராய்ந்தோம். அதன் பின்னரே இந்த தீர்மானத்திற்கு வந்தோம் என சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.