Header Ads



இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய, தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர் நியமிப்பு


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆர்த்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான மிக்கி ஆர்த்தர், தென் ஆப்பிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னர் பணிபுரிந்துள்ளார்.

பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

நடந்து முடிந்த 2019ஆம் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையுறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

ஆனாலும் அவர் அந்த அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பியும், அணி நிர்வாகம் அதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மிக்கி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி கடமைகளை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக்கி தென் ஆப்பிரிக்க பயிற்சியாளராக 2005 - 2010 ஆண்டுவரை இருந்த காலக்கட்டத்தில் அந்த அணி சர்வதேச டெஸ்ட் அணிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

அதே போல அவர் பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த போது கடந்த 2017ல் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

மிக்கி இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.