Header Ads



கோத்தபாய ராஜபக்ச அறிந்த திட்டத்திற்கு அமையவே, ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது - அமில தேரர்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் பல இடங்களில் நடந்த குண்டு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக கலாநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலுடன் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அறிந்த திட்டத்திற்கு அமையவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்து மறுநாளே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதாக கோத்தபாய அறிவித்தார். இதன்மூலம் அந்த தாக்குதலின் சதித்திட்டம் அம்பலமாகியது.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பிரதான நபரான சஹ்ரான் ஹசீம் உட்பட அவரின் குழுவினருக்கு கோத்தபாய ராஜபக்ச சம்பளம் கொடுத்து பராமரித்து வந்துள்ளார். அது அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்கூட்டியே தயார்ப்படுத்தல்.

ஒரு வேளை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றால், தேர்தல் மனு ஒன்றின் மூலம் அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவோம். பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பது அநியாயம் எனவும் அந்த வாக்குகள் செல்லுபடியாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உண்மையைத்தான் நீங்க சொல்றீங்க. ஆனா இத சிங்கள மக்கள் நம்பணுமே !!

    ReplyDelete

Powered by Blogger.