November 07, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கை மீட்பதற்கு முன், நாம் கிழக்கை மீட்க வேண்டும்

தீபாவளி, கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தீர்வு வரும் என்று கூறுகின்றனர் ஆனால் தீர்வு வரும் போது வடமாகாணம் இருக்கும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கறுவாக்கேணியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு இறுதிச் சந்தர்ப்பம். தமிழர்களுடைய நிலம், வளம் பறிபோய்க் கொண்டிருக்கின்றது. சமய பண்பாட்டு அம்சங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நல்லிணக்கம் பேசிக்கொண்டு தமிழர்களுடைய இருப்பை அபகரிக்க நினைக்கின்ற சில முஸ்லிம் அரசியல்வாதிகளோடு சேர்ந்து கூத்தடிக்கின்ற நபர்களாக சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கிலே செயல்பட்டு வருவதன் விளைவால் 58.9 விகிதமாக இருந்த தமிழர்களின் இன விகிதாசாரம் 38 சத விகிதத்திற்கு வந்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவர் ஒரு முஸ்லிம் நபர். எங்களுக்கு முன் இருந்த அரசியல் தலைவர்கள் சாணக்கியமாகவும், ராஜதந்திரமாகவும் செயற்பட்டிருந்தால் நாங்கள் இன்று வீதிக்கு இறங்கி போராட வேண்டிய அவசியம் வந்திருக்காது.

இவர்களே தமிழ் சமூகத்தினுடைய இருப்பை அழிக்கின்ற செயற்பாட்டிலே முக்கிய சூத்திரதாரியாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். ஐந்து கட்சிகள் சேர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையிலே கூடி 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.

கடைசியிலே தங்களோடு இணைந்த நான்கு கட்சிகளுக்கும் தெரியாமல் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் வவுனியாவில் கூடி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியிருக்கின்றார்கள். இதைதான் நான் இரண்டு மாதத்திற்கு முன்னரே கூறியிருந்தேன்.

கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று கூறுகின்ற சில தமிழ் கட்சிகளில் தலைவர்கள், கொள்கை பரப்பாளர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் கிழக்கை மீட்பதற்கு முன் நாம் இவர்களிடமிருந்து கிழக்கை மீட்க வேண்டும். இவர்களிடமிருந்து கிழக்கிலுள்ள எமது மக்களை மீட்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 115 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு பலவகையில் அபகரிக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் பெரும்பான்மையாக இருந்து தமிழர்கள் திட்டமிட்ட இன அழிப்புக்கள், குடியேற்றங்களால் 17 வீதமாக மூன்றாவது இனமாக அம்பாறையில் தள்ளப்பட்டுள்ளோம்.

திருகோணமலை நகரிலுள்ள நகர சபையை மாநகர சபையாக கொண்டு வருவதற்கு கூட அவரால் முடியவில்லை. அக்கரைப்பற்றில் பிரதேச சபையை ஒரே இரவில் மாநகர சபையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மாற்றிக் காட்டினார்.

கிழக்கில் தமிழர்களின் இருப்பு கேவலமாக வந்ததற்கு காரணம் மாற்றின அரசியல்வாதிகளை விட தமிழ் அரசியல்வாதிகள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன். நாங்களும் கிழக்கிலே இராஜதந்திரமாக அரசியலை செய்யா விட்டால் அடுத்த தலைமுறை வீதியில் இறங்கி போராடும். மாற்று சமூகத்திடம் கையேந்தி வாழும் நிலை உருவாகும்.

தீபாவளி, கிறிஸ்மஸ்க்கு தீர்வு வரும் என்று கூறுகின்றனர். தீர்வு வரும் போது வடமாகாணம் இருக்கும கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 கருத்துரைகள்:

உலமா முபாறக்,அலி சப்ரி,பைசர் முக்ஷ்தபா,மயோன்,முஸம்மில் ஆளுனர்,அதாவுல்லா,மக்ஷ்தான் ஆகியோரே,வியாழேந்திரன்,மற்றும் கருணா இருவரும் ஒரு சில தினங்களாக கூறும் Muslim களுக்கு எதிரான மிகக் கடுமையான இனவாத வெறி ஊட்டும் கருத்துக்களுக்கு நீங்கள் வாய் மூடி இருப்பதன் மர்மம் என்ன? ஏனெனில் அவர்கள் இருவரும் நீங்கல்கலும் ஒரே அணியில் உள்லிர்கல்.எனவே,இவர்களின் இனவாத கருத்துக்களை மஹிந்தவிடமாவது முறையிட்டீர்கலா? இதைத்தான் நாங்களும் கூறுகிரோம் இப்படியான தமிழ்,சிங்கள இனவாதிகல் மஹிந்தவை சூழ உள்ளனர் ஆனால் அங்கே நீங்கள் அனைவரும் இருந்தும் இப்படியான இன வெறி கருத்துக்களை அவர்கள் வெளியிடுவதை தடுக்க திறமையற்ற நீங்கள் என்ன முகத்துடன் எம்மவிடம் வாக்கு போடுமாரு கோருகிரிர்கல்.

கிழக்கு பற்றி பின்னர் சிந்திக்கலாம். அந்த அவுஸ்தரேலியாவுக்கு வெளிக்கிட்டவங்கட பிரச்சினைகளை முதலில் முடியுங்கள். ராமன் எண்டாலும் ராவணன் எண்டாலும் நிச்சயமாக உங்களைவிட நல்லவன் வருவான்.

முஸ்லிம்கள் மீது இனவாதம் பேசினால்தான் அரசியலில் நீடிக்கலாம் என்ற
மகிந்தவின் சிந்தனையை திறம்படவே செயலாட்டுகிறார்கள் - கருணா , வியாளந்திரன், ரத்ன தேரர், விமல் வீரவம்ச. இதையும் சகித்து கொண்டு ஒன்னும் கேளாதது போல வெட்கமில்லாமல் சிரித்து கொண்டே அவர்கள் கூடவே அணிதிரள்கிறார்கள் - பைசர் முஸ்தபா , முபாரக் அலி , மாயோன் முஸ்தபா, அதாவுல்லா , அலி சப்ரி, முஸம்மில் ,நஜீப் எ மஜீத், மஸ்தான் ஆகியோர்கள்
புத்தியுள்ள ஒவ்வரு முஸ்லீம் குடிமகனும் இவர்களை அடையாளம் கண்டு இனி வரும் காலங்களில் இவர்களை ஒதுக்கி விரட்டி அடிப்பார்கள்.
மர்சூக் மன்சூர் - தோப்பூர் -07

இவர் சொல்லுவது 100% உண்மை

HE MR.VIYALN HAS ALREADY MADE ARRANGEMENTS TO RUN TO CANADA AFTER NEXT PARLIAMENT ELECTIONS OR EVEN BEFORE.THOSE BOYS WEARING BLACK SHIRTS WILL HAVE TO JUMP FROM KALLADY BRIDGE.VIYALAN IS TRYING TO FOOL YOUNG TAMIL BOYS FOR HIS OWN BENEFIT AS WHAT THAT FOOL SEEMAN IS DOING IN TAMIL NADU WEARING BLACK SHIRTS AND USING PRABAKARANS NAME.BATTICALOA BLACK SHIRTS PLEASE THING ABOUT YOUR FUTURE AFTER THIS GUY LEAVE SRI LANKA AND GO TO CANADA WHAT WILL HAPPEN TO ALL OF YOU.

Post a Comment