Header Ads



சந்திரிக்காவை பதவி நீக்க நடவடிக்கை...?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை மற்றும் ஆலோசகர் பதவியில் இருந்து அவரை நீங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிய வருகிறது.

இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு ஒரு மனதாக மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமை மற்றும் அதனை ஏனைய உறுப்பினர்களை ஈடுபடுத்திக் கொண்டமை ஆகிய காரணங்களுக்காக அவர் கட்சியின் ஒழுக்காற்றை மீறியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை வெற்றி பெற செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு மனதாக தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரான சந்திரிக்கா குமாரதுங்க அதற்கு எதிராக செயற்பட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்காக சந்திரிக்கா குமாரதுங்க நேற்றைய தினம் ஒப்பந்தம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பாவம் மாமி - என்ன செய்யப்போவதாக உத்தேசமோ தெரியல.
    பேசாம உண்மையான இலங்கை சுதந்திர கட்சி என்று இன்னொரு கட்சியை உருவாக்கி இவருக்கு பின்னால் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்து
    ஆட்டத்தை ஆரம்பிக்கலாமே....
    மர்சூக் மன்சூர் -தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.