Header Ads



கோத்தபய வெற்றியீட்டி முஸ்லிம்கள், மீது வன்முறை நிகழ்த்தப்பட்டால்...?

- நஜீப் பின் கபூர் -

2019 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான விருப்பு வெறுப்புக்கள் பெரும்பான்மை சமூகத்தினரிடையேயும் சிறுபான்மை சமூகத்தினரைடையேயும் நேர்மாறான போக்கில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. பெரும்பான்மை பௌத்த மக்கள் இந்தத் தேர்தலில் கோதாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். அனேகமான சிங்கள, ஆங்கில ஊடகங்களும் அதற்கிசைவாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் சஜித்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர் என்பதனை ஒழிவு மறைவின்றிக் கூற வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் அப்படி மக்கள் தமது விருப்புக்களுக்கு ஏற்ப செயல்படுவதை எவரும் தடைசெய்யவோ தடுக்கவோ முடியாது. அது அவரவர் உரிமை. ஆனால் இந்தத் தேர்தல் கட்சிகளிடையே நடைபெற்ற தேர்தல் என்பதனைவிட பெரும்பான்மைக்கும் சிறுபான்மைக்குமிடையே நடைபெற்ற ஒரு கயிறிழுப்புப் போட்டியாகவே எமக்கு தெரிந்தது.

இதில் யார் வெற்றி பெறப்போகின்றார்கள் என்ற விடயத்தில் நாம் தொடர்ச்சியாக சில கருத்துக்களைக் கூறி வந்திருக்கின்றோம். அந்தக் கருத்துக்களை சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் ஜீரணித்துக் கொள்வதில் மிகவும் விருப்பமில்லாத நிலை இருந்ததையும் நாம் நன்றாகத் தெரிந்துதான் வைத்திருந்தோம். அதற்காக ஒரு பத்திரிகைக்காரன் என்ற வகையில் யாதார்த்தத்தை மறைக்க நாங்கள் விரும்பவில்லை. எனவேதான் தொடர்ச்சியாக வெற்றி வாய்ப்புக்கள் தொடர்ப்பில் நாம் சொல்லி வந்த கருத்துக்களால் எம்மீது ஒரு கோபப் பார்வை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது. அது 18ம் திகதி இறுதி முடிவு தெரியும் போது சரியாகி விடும் என்று நாம் கருதுகின்றோம்.

இப்போது நாம் சொல்கின்ற கதை-செய்தி முற்றிலும் வேறுபட்ட ஒரு விவகாரம். இந்தத் தேர்தல் முடிவுகளுடன் நடைபெறுகின்ற வெற்றிக் களிப்பு சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மீதான வன்முறையாக மாறுவதற்கு நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே நாட்டில் சிதறி வாழ்கின்ற முஸ்லிம்கள் தாம் யாருக்கு வாக்களித்தாலும் மிகவும் நிதானத்துடனும் புத்திகூர்மையுடனும் வருகின்ற நாட்களைக் கடத்த வேண்டி இருக்கின்றது. முள்ளில் போட்ட சீலையை லாவகமாக எடுப்பது போல்தான் முஸ்லிம் சமூகம் இங்கு காலம் கடத்த வேண்டியுள்ளது. இதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளி நிருவாகங்கள் இது விடயத்தில் தமது பிரதேசத்திலுள்ள இளைஞர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். 

தேர்தல் முடிவுகள் வெளிவருகின்ற நேரத்திலும் முடிவுகள் வெளிவந்த பின்னரும் தமது உணர்வுகளை அடக்கிக் கொண்டு பொறுமை காக்க வேண்டி இருக்கின்றது. அதே நேரம் மொட்டுக்கள் தரப்பில் இன்று செயல்படுகின்ற முஸ்லிம் தலைவர்கள் வெற்றிக் களிப்பு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாக மாறிவிடாமல் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. இன்று ஜனாதிபதி சட்டதரணி அலி சப்ரி, அதாவுல்லா, மற்றும் துணைக்கு நிற்கின்ற முஸ்லிம் பிரிவு முக்கியஸ்தர்கள் இது விடயத்தில் விளிப்பாக இருந்து காரியம் பார்க்க வேண்டி இருக்கின்றது என்பதனை நாம் முன் கூட்டியே சொல்லி வைக்க விரும்புகின்றோம்.-நன்றி    

2 comments:

  1. Enda parweyil intha katturayum pakka sarfanathu

    ReplyDelete
  2. உங்கள் யூகம் பிழையானது.மொட்டு வாடிவிடும்.அன்னமே ஜனதிபதி

    ReplyDelete

Powered by Blogger.