Header Ads



இலவச மருத்துவமனையாக, மாறிய பள்ளிவாசல்


சுமார்ஒன்றரை இலட்சம் ஏழை மக்கள் வசிக்கும், மையப் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்தான் ஹைதராபாத் மஸ்ஜிதே இஷ்ஹாக் எனும் மசூதி ஆகும்.

ஏழை மக்கள் மருத்துவமின்றி அவதிப்படுவதை கருத்தில் கொண்டும், ஹெல்பிங் ஹேன்ட் எனும் சேவை நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற அந்த மசூதியின் நிர்வாகம், சுமார் 1000 சதுர அடியுள்ள மசூதியின் கீழ்பகுதியை இலவச மருத்துவ சேவைக்காக ஒதுக்கியுள்ளது.

அடிப்படை மருத்துவ சேவை முதல் விபத்து சிகிச்சை, மகப்பேறு, பிசியோ தெரபி உள்ளிட்ட அனைத்து வகை சிகிச்சைகளையும் #அனைத்து #மதமக்களுக்கும் இலவசமாக செய்கிறது.

மேலும்,ஏழை மக்கள் வருகைக்காக இலவச வாகன வசதியையும் செய்து கொடுத்து அனைத்து மக்களின் உள்ளத்தையும் கவர்ந்துவிட்டது மஸ்ஜிதே இஷ்ஹாக் எனும் ஹைதராபாத் மசூதி.

வல்ல இறைவன் அவர்களின் பணியை மேன்மேலும் சிறக்க உதவி செய்வானாக!

2 comments:

  1. May almighty Allah grant them more & more prosperity and loftiest stations in Jannathul Firdous! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.