Header Ads



இலங்கையில் இந்த அப்பிளை வாங்கிச் சாப்பிடாதீர்கள்


கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் தெருவோரங்களில், ராகல ஆப்பிள் என்ற பெயரில் சிறிய வகை ஆப்பிள்கள் 100/- க்கு 6 போன்ற மலிவான விலையில் விற்கப்படுவதைக் கண்டிருப்பீர்கள்.

பொலன்னறுவை ஆகார பரிசோதனை அதிகாரிகள் இதைக் குறித்து பரிசோதனை நடத்திய வேளையில், இந்த ஆப்பிள்கள் நீண்ட காலம் கெடாதிருப்பதற்காக, மனிதர்களுக்கு மாத்திரமல்லாது விலங்குகளுக்குக் கூட பெரும் தீங்கினை விளைவிக்கக் கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் பூசப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

எனவே எவரும் இந்த வகை ஆப்பிளை வாங்க வேண்டாம். உங்கள் ஊரில் இவ்வாறான ஆப்பிள் வகைகள் விற்கப்படுவதைக் கண்டால் உடனடியாக உங்கள் ஊர் ஆகார பரிசோதனை உத்தியோகத்தர்களுக்கு (P.H.I) அறியத் தாருங்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்



1 comment:

  1. Why authorities allowed this kind of poison come into the country.before you allow u should check by concern authorities.useless management system.

    ReplyDelete

Powered by Blogger.