Header Ads



இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி கோத்தா, மோடிக்கு அழைப்பு


தமது பதவி காலத்தின் முதல் இராஜதந்திரியாக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய பிரதமருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்து சமுத்திரம் சமாதான வலயமாக திகழ்வதை உறுதிசெய்வதற்காக இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவேன்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்தேன். இருநாடுகளின் பாதுகாப்புத் தொடர்பிலும் பேச்சுவார்த்தையின் போது ஆராய்ந்தேன்.

அத்துடன் இலங்கையில், சிறைவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும்.

இலங்கை மற்றும் இந்தியாவுடனான உறவு  மேலும் வலுப்பெற வேண்டும் என்பதேன எமது விருப்பம். அத்துடன் பாதுகாப்பு பொருளாதாரம் ஆகியவற்றில் இணைந்து செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.