Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் சேட்டை - தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இடம்கொடுக்காது - பிரசாந்தன் மிரட்டல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஊடகங்கள் வாயிலாகவும் எம்மை விமர்சிப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும். ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு இவர்கள் விடுத்துள்ள முறைப்பாடானது நூறு வீதம் உண்மைக்குப் புறம்பானது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்றையதினம் -01- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் பலவற்றிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உட்பட அவற்றின் உறுப்பினர்கள் பலர் குறிப்பாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களையும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் மிக மோசமாகச் சாடி வருவதும் வருகின்ற தேர்தலில் முன்னாள் போராளிகளூடாக குழப்பத்தை ஏற்படுத்த முனைவதாகவும் வாக்கு மோசடியில் ஈடுபட இருப்பதாகவும் ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு முறைப்பாடு செய்திருப்பதாக பத்திரிகை வாயிலாக அறிகின்றோம்.

இதனை எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆயுதம் ஏந்திப்போராடிய கட்சி ஆனால் 2008ஆம் ஆண்டின் பின்னர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி ஜனாநாயக ரீதியாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தில் எமது தலைவர் சந்திரகாந்தனின் தலைமையின கீழ் பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்துவரும் கட்சி.

அண்மைக்காலங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ஊடகங்கள் வாயிலாகவும் எம்மை விமர்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

ஐரோப்பிய தேர்தல் கண்காகணிப்பு குழுவிற்கு இவர்கள் விடுத்துள்ள முறைப்பாடானது நூறு வீதம் உண்மைக்குப்புறம்பானது.

நான் நினைக்கின்றேன் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் கடந்தகாலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தழிழ் தலைமைகளை ஏமாற்றி 11 ஆசனங்களை வைத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் 07 ஆசனங்கள் வைத்திருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு கபட நாடகமாடி முதலமைச்சரைப் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்புக்களை இல்லாமல் செய்வதற்கு முயற்சித்தனர்.

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக கிழக்குத் தமிழர்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க மாட்டார்கள், நிச்சயமாக கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு வாக்களிக்க இருக்கும் நிலமையில் தமது தோல்விகளுக்குமான காரணங்களை சாக்கு போக்குகளை இப்பொழுதே தேடுகின்ற நிலைப்பாடுதான் சந்திரகாந்தன் அவர்கள் மீதும் தமிழ் மக்கள் கட்சியின் மீதும் ஐரோப்பிய தேர்தல் கண்கானிப்பு குழுவிற்கு முறைப்பாடு செய்தது தொடக்கம் அன்மைக்கலமாக ஊடகங்களில் தெரிவித்த கருத்துவரைக்கும் அதனையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆகவேதான் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் தமிழர்கள் தங்களின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவேதான் கோத்தபாயவை ஆதரிக்கவேண்டும் என்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கூற்றுக்குப்பின்னால் மிக மோசமான வண்மையான குற்றச்சாட்டுக்களை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

இது தொடர்பாக நாமும் எமது சார்பாக தேர்தல் கண்காணிப்புக்குழுவிற்கு எமது பதில் கடிதத்தை அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக நேரடடியாக விளக்கம் கொடுக்விருக்கின்றோம்.

அது மாத்திரமல்லாமல் முன்னாள் பேராளிகள் ஜனநாயகப் பாதையில் திரும்பியிருக்கின்ற வேளையிலே அவர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக மீண்டும் ஒரு போராட்டக்குழுவாக பாரிய ஒரு அச்ச நிலமையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தி வாக்குகளை கபழீகரம் செய்கின்ற ஒரு முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளது தெரிகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் இவ்வாறான சேட்டைகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒருபோதும் இடம்கொடுக்காது என்பதை நாம் கூறிக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. ahhaaa are you a chandiya ???

    ReplyDelete
  2. PARAMASIVAN(GOTHA-KARUNA)KALUTHIL IRINDU PAMPU(prasandhan)KEDATHU KARUDA (HAKEEM-SLMC)SAUKIYAMA?

    ReplyDelete

Powered by Blogger.