Header Ads



சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மோதல்கள் இருந்தன -


சமாதானமான நாட்டை தக்கவைத்துக் கொள்ள தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எமது நாட்டில் யுத்த சூழல் காணப்பட்டது.

சிங்கள மக்களுக்கும் , முஸ்லிம் மக்களுக்கும் இடையில் மோதல்கள் இருந்தன.

அவசரகால சட்டமும் நாடாளுமன்றத்திற்கு வந்ததது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

ஆகவே அவருக்கு அரசியல் ரீதியிலான மாறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன.

மீண்டும் ஒரு யுத்தம், முரண்பாடுகள் உள்ள சூழ்நிலை நாட்டில் வேண்டுமானால் எதிர்தரப்பு முகாமை மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேர்ந்தெடுக்க முடியும்.

அதேவேளை சாமாதானம் மிக்க நாடு அவசியம் என்றால் தங்களுடைய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.