Header Ads



எனது ஆட்சியில் புதிய சட்டங்களை அமுல்படுத்தி இனவாதத்தையும், மதவாதத்தையும் ஒழிப்பேன் - சஜித்

எவ்வித பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்றைய தினம் -04-  இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எமக்கு தேவை ஜனநாயகமே. அதேபோல நாம் பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவது போல இனவாதம் சமயங்களுக்கு இடையிலான பிரிவினை வாதம் போன்றவற்றையும் நாம் ஒழிப்போம்.

எமது நாடு ஒரு சோசலிச நாடாகும். அரசியலமைப்பில் ஜனநாயகம், சோசலிசம் எழுத்துக்களால் எழுதப்பட்டிருப்பது போதாது.

எமது மனங்களிலேயே அவை பதிந்து நிற்க வேண்டும். இன, மத பேதங்கள் இருந்தால் எமக்கு அதை செய்ய முடியாது.

எனது ஆட்சியில் நான் அதற்கு புதிய சட்டங்களை அமுல்படுத்தி இனவாதத்தையும், மதவாதத்தையும் ஒழிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. பார்க்கலாம் பாஸ்!
    உங்களின் மீது நல்லெண்ணம் உண்டு. ஆனால் ஜனாதிபதியான பின்னர் எப்படி உங்கள் நடவடிக்கை இருக்கும். பார்ப்போம்

    ReplyDelete
  2. அப்படியானால் மதவாத கட்சிகளையும் ஒழிக்க வேண்டும்.... BBS, மரம், மயில்....

    ReplyDelete
  3. அஜன் ஏன் நிறைய தமிழ் கட்ச்சிகலும் உண்டு ஏன் அவைகளை நீர் கூற வில்லை

    ReplyDelete
  4. @Rizard, கிருஸ்தவர்களும் இந்துக்களும் ஆண்டவரை தொழுவதற்கும் மக்களை நல்வழிப்படுத்தவும் மட்டுமே தமது மதம் களை பின்பற்றுகிறார்கள், அரசியல் சாக்கடைகளில் கலக்க அல்ல

    ReplyDelete

Powered by Blogger.