Header Ads



ஐதேக பதவி, விலக வேண்டும் - மகிந்த வலியுறுத்து

ஜனாதிபதி ஒரு கட்சியிலும் அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிடவில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற மத வழிபாட்டின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதே சிறந்தது. தற்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே உள்ளது. ஜனாதிபதி ஒரு கட்சியிலும், அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது.

தற்போது அமைச்சரவையில் இருந்து சிலர் விலகியுள்ளனர், அதேபோல மக்கள் ஆணையை ஏனையோரும் ஏற்று பதவி விலகுவார்கள் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அரசாங்கம் பதவியேற்கும் போதும் பதவி விலகும்போதும் நாட்டின் சட்டத்தைப் பின்பற்றப்படவேண்டும்.பிரதமர் பதவி விரும்பி பதவி விலகாவிட்டால்,அடுத்த பொதுத்தேர்தல்வரை அவர் பதவி வகிக்கலாம்.இன்னும் நான்கு மாதங்களின்பின்னர் பொதுத்தேர்தல் நடைபெற்றால் அதுவரை ரணில் பிரதமராக பதவிவகிக்க இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. ஆனால் மஹிந்த பொதுமக்களையும் குறிப்பாக fear psychosis மூலம் மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெற்றதுபோல் பிரதமரையும் ஏனைய அமைச்சர்களையும் பதவி விலகுமாறு பயமுறுத்துகின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.