Header Ads



பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணிகளிடம், பிரசாரம் செய்யும் மருத்துவர்கள்

அநுராதபுர வைத்தியசாலையில் பிரசவத்துக்கு சென்ற பல பெண்களிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு அங்கு கடமையில் இருந்த மருத்துவர் சொல்லவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான The Centre for Monitoring Election Violence (CMEV) தகவல் வெளியிடுகையில்,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரச வைத்தியசாலைகளிலுள்ள மருத்துவர்கள் செயற்படுகின்றனர்.

குறிப்பாக அநுராதபுர வைத்தியசாலையில் பிரசவத்துக்கு சென்ற பல பெண்களிடம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு அங்கு கடமையில் இருந்த மருத்துவர் வற்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

இதுபோன்ற தேவையற்ற பிரசார நடவடிக்கைகளைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தேர்தல் ஆணையம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ஷவின் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் சம்பவம் கொழும்பு மத்திய மருத்துவமனையில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு மத்திய மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் இலங்கை தேர்தல் ஆணையகத்தினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.