Header Ads



மஹிந்தவுக்கு சவால், விடுத்துள்ள மங்கள

மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையினால் நாட்டுக்கு அல்லது மக்களுக்கு எத்தகைய தீங்கு ஏற்படும் என்பதை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர சவால் விடுத்துள்ளார்.

மில்லேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று -05- வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுடன் கைச்சாத்திடுவதற்குத் திட்டமிட்டிருக்கின்ற மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையினால் நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று தெளிவுபடுத்தவில்லை. 

மாறாக அமெரிக்காவினால் அழிவு ஏற்படும் என்பது போன்ற மாயை உருவாக்க முயற்சிக்கின்றார். ஜனாதிபதித் தேர்தல் திகதி நெருங்கும் நிலையில் மக்களை தவறாக வழிநடத்தாமல், மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையினால் நாட்டுக்கு அல்லது மக்களுக்கு ஏற்படும் தீங்கு என்ன என்பதை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் அனைவருக்கும் சவால் விடுப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.