Header Ads



பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலையடுத்து இலங்கையில், ஆட்சிமாற்றம் நிகழுமென இந்தியா உறுதியாக நம்பியது

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இலங்கையின் நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது என  ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை பின்பற்றும் என தெரிவித்துள்ள இந்திய ஊடகம்  இந்தியாவின் மூலோபாய நலன்களிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனாவின் கடற்கலங்கள் எதனையும் கோத்தபாய ராஜபக்ச தனது நாட்டிற்குள்அனுமதிக்கமாட்டார் என புதுடில்லி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாகயிருந்தவேளை மூத்த ராஜபக்ச சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதித்தமை குறித்து இந்தியா கடும் சீற்றமடைந்தது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலை தொடர்ந்து இலங்கை ஆட்சி மாற்றத்தை நோக்கி நகர்கின்றது ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடும் என்பது குறித்து புதுடில்லி கடந்த சில மாதங்களாக உறுதியாக நம்பதொடங்கியது என ஸ்டேட்ஸ்மன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக தாங்கள் ராஜபக்சவிற்கு எதிரானவர்கள் என்ற கருத்தினை அகற்றுவதற்கு புதுடில்லி முயன்று வந்தது எனவும் ஸ்டேட்ஸ்மன் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே மகிந்த ராஜபக்ச கடந்த செப்டம்பரில் இந்தியா விஜயம் மேற்கொண்டவேளை  நரேந்திரமோடி அவரை சந்தித்தார் எனவும் இந்திய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. 

4 comments:

  1. அப்போ, இந்த ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்கிறாரோ மோடி ஐயா

    ReplyDelete
  2. Ayyo ayyo......One day we will know all facts inshaallah

    ReplyDelete
  3. Similar to April Easter incident in Sri lanka, there were incidents in India and US before the election. So this type of things are used as tool to win the election in three countries.

    ReplyDelete

Powered by Blogger.