Header Ads



"மக்களாகிய நாம், நாளை மட்டுமே ராஜாக்கள்"

நாளை விடிந்தால் தேர்தல், ஞாயிறு அல்லது திங்கள் பகல் அடுத்த ஐந்து வருடத்திற்கான நாட்டின் தலைவிதி யாரிடம் கொடுக்கப்படுகிறது என்பது தெரிந்து விடும்.

நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க நாம் எல்லாம் வாக்களிக்க உற்சாகமாக இருக்கின்றோம்.

தேர்தலுக்கான எத்தகைய பிரசாரங்களும் தடை செய்யப்பட்டுள்ளது‌.

வாக்காளர்கள் எந்த அழுத்தத்துக்கும்,மூளைச்சலவைக்கும் ஆளாகாமல் சுயமாக சிந்தித்து தீர்க்கமான முடிவுடன் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாற்பத்தியெட்டு மணித்தியாலங்கள்(இரண்டு நாட்கள்) சகல பிரசாரங்களும் தடை செய்யப்படுகின்றது.

ஆனால் இலங்கை,இந்தியா  போன்ற நாடுகளில் இந்த இறுதி இரண்டு நாட்களிலும்,

உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு விருந்து,பார்ட்டி,உத்தியாகம்,பதவி உயர்வு,வெளிநாட்டு பயணம் என நேரடி வாக்குறுதிகள் பரிமாறப்படும்.

நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டில் வாழும் மக்களுக்கு பணம்,சாராயம்,கசிப்பு,உடுப்பு,உணவுப் பார்சல்கள் பட்டுவாடா செய்யப்படும்.

இறுதிக்கட்டத்தில்‌ வீடுவீடாகச் சென்று வீடு தருவோம்,
தொழிலுக்கு பணம் தருவோம் என்ற ஆசை காட்டுதல் எல்லாம் இடம்பெறும்.

இதைவிட மிரட்டுதல்,இடையூறு விளைவித்தல்,வாக்களிக்க செல்லுவதை தடுக்கும் வகையில் பிரச்சினைகளை உருவாக்குதல் போன்ற அடாவடித்தனங்களும் நடக்கும்.

எனவே இவற்றையெல்லாம் கடந்து மக்கள் சுயமாக சிந்தித்து,தீர்க்கமான முடிவெடுத்து வாக்களித்தல் என்பது ஒரு போராட்டம் தான்,

மக்களே !!!
நீங்கள் வாக்களிப்பது உங்களுடைய அல்லது குடும்பத்துடைய தேவைக்காக மட்டுமல்ல உங்களோடு உங்கள் தெருவில்,ஊரில்,பிரதேசத்தில்,இந்தத் தேசத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்காகவும் என்ற ஒரு கூட்டு ப் பொறுப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

மக்கள் சந்தோசமாகவும்,
அமைதியாகவும்,உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடனும் வாழ வேண்டுமென்பதற்காக,குறிப்பாக சிறுபான்மை மக்கள் அச்சமின்றி தமது அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டுமென்பதை மனதில் நிறுத்தி தீர்மானியுங்கள்.

ஒரு நாட்டின் தலைமைத்துவம் தெரிவு செய்யப்படும் போது,

அவனுடைய தலைமைத்துவ ஆளுமை !!!

அவனுடைய சர்வதேச அங்கீகாரம் !!!

அவனுடைய கொள்கை, குறிப்பாக சிறுபான்மை மக்கள் தொடர்பான நடத்தை !!!

பத்திரிகையாளர் அல்லது ஒரூ ஊடக மாநாட்டை எதிர் கொள்ளும் விதம் !!!

எத்தகைய சந்தர்ப்பத்திலும் குறிப்பாக பொது நடவடிக்கைகளில் உணர்ச்சி வசப்படாமல் நிலைமையை சமாளிக்கும் திறன் !!!!

கட்சி நலனை விட,மக்கள் நலனை முன்னிறுத்தி எதையும் சுயமாக கையாளும் திறன் !!!!

போன்ற விடயங்கள் யாரிடம் அதிகமாக இருக்கின்றதோ அதன் அடிப்படையில் சிந்தித்து வேட்பாளரை தெரிவு செய்யுங்கள் !!!!

இரண்டாம் சுற்றுக்காக என்று தெரிந்து வாக்களிக்காதீர்கள் !!!!

எமது இனம் சார்ந்த ஒருவர் கேட்கின்றார் என்பதற்காகவ வாக்களிக்காதீர்கள் !!!!

இறுதி இரண்டு காரணிகளுக்காகவும் வாக்களிப்பது நல்ல நாட்டின் பிரஜை ஒருவனின் சிறந்த பண்புமல்ல,

நாளை ஒருநாள் மட்டுமே நாம் இந்நாட்டின் மன்னர்கள் ராஜாக்கள்,

எந்த ஒரு சிறுபான்மை வாக்கையும் வாக்களிக்காமல் ஒதுங்கு இருப்பதன் மூலமோ பெறுமதியற்றதாக்கி விடாதீர்கள் !!!!

இரண்டாம் சுற்றுக்காக வாக்களிக்காதீர்கள்!!!!

நம்மவர் என்பதற்காக வாக்களிக்காதீர்கள் !!! கூட்டுப்பொறுப்பை மறந்து வாக்களித்து விடாதீர்கள்.

நாளை மட்டுமே நாம் ராஜாவைத் தெரிவு செய்யும் ராஜாக்கள்.

"அஜ்மல் மொஹிடீன்"

No comments

Powered by Blogger.