Header Ads



முஸ்லிம் சமூகத்திடம் மனோகணேசன், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்


முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது நடந்து கொண்ட முறையற்ற சம்பவம் முதல் கடந்த அரசில் முஸ்லிங்களுக்கு எதிராக செய்த சகல முறையற்ற அரசியல் முன்னெடுப்பு தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்திடம் முன்னாள் சமூக நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் மன்னிப்புக் கோர வேண்டும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

கடந்த வாரம் தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் மனோ கணேசன் ஆகியோர்களுக்கிடையிலான கருத்து பரிமாற்றத்தின்போது நடைபெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் இழப்பிட்டுக்கான ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு அக்கரைப்பற்று மேன்கோ காடனில் நேற்றிரவு (26) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் தமது பக்க உரையாடல்களை தொடர்ந்துகொண்டிதிருந்த போது திடீரென எழுந்த மனோகணேசன் ஆவேசப்பட்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது தண்ணீரை வீசினார். 

"தோட்டகாட்டான்" எனும் சொல்லாடல் மலையகத்தை சேர்ந்த இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் தொன்று தொட்டு பாவித்து வரும் சாதாரண சொல்லாடலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதை அவர் பெறிதாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று தனது எதிர்கால பாராளுமன்ற உறுப்புரிமையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் மிக மோசமான முறையில் நடந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா பேசுவதற்கு இடையூறு செய்துகொண்டே நிகழ்ச்சி தொகுப்பாளர் இறுதியில் அதை தெளிவாக வெளிக்காட்டினார்.

கடந்த அரசில் முஸ்லிங்களை இலக்கு வைத்து பல முன்னெடுப்புக்களை செய்துவந்த மனோ கணேசன் வழக்கமாக மக்களின் பாவனையில் இருந்து வந்த சொல்லை பூதாகரமாக்கி அரசியல் ஆதாயம் தேடும் பணியையே அவர் அன்றைய நிகழ்ச்சியின்போது செய்தார். 

பொதுமக்களிடத்தில் வழமையாக பாவிக்கப்படுகின்ற கொழும்பான், மட்டக்களப்பான், யாழ்ப்பாணி, சோனி, சிங்களவன், தமிழன் என்பதுபோல அதுவும் ஒன்றுதான்.

ஓரிடத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும்போது வெள்ளம் என்றும் அது படர்ந்து இருந்தால் வெள்ளகாடு என்றும் அழைப்பது போன்று தோட்டப்பரப்பு காடு போன்று விரிந்து இருந்தமையால் தோட்டக்காடு என்று அன்று முதல் இன்றுவரை இலக்கியங்களிலும், பேச்சிலும் இருந்து வருகிறது. அது இழி சொல்லாக இருந்திருந்தால் கடந்த அரசில் அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்தபோது மனோ கணேசன் அதை தடைசெய்திருக்க வேண்டும்.

கடந்த அரசில் அமைச்சராக இருந்து கொண்டு மனோ கணேசன் முஸ்லிங்களை நிந்திக்கும் எத்தனையோ வேலைத்திட்டங்களை செய்திருக்கிறார், எத்தனையோ சொல்லாடல்களை பயன்படுத்தியும் உள்ளார். அவை அடங்களாக முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களிடமும் பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் நடந்துள்ளார். 

"தோட்டகாட்டான்" எனும் சொல்லாடல் மலையக மக்களின் கௌரவத்திற்க்கு பங்கம் விளைவிப்பதாக கருதினால் மனோகணேசன் அவர்களின் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இனிவரும் காலங்களில் அந்த சொல்லை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனும் பிரகடனத்தை முன்மொழிய வேண்டும்.

ஆகவே, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், தான் செய்த தவறுக்கு முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என நாங்கள் தெரிவிக்க விரும்புகிறேன். என்றார்.

பைஷல் இஸ்மாயில், எஸ்.எம்.அறூஸ்

11 comments:

  1. தயவு செய்து இதை முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்
    இந்த பிரச்சினை முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினை அல்ல
    ஒரு முஸ்லீம் சமூகமும் இந்த அதாவுல்லாவை முஸ்லிம்களின் பிரதிநிதியாக சென்று விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு அனுப்பவுமில்லை
    மனோ கணேசன் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமுமில்லை.
    மனோ கணேசன் மன்னிப்பு கேட்க வேண்டுமானால் நேரடியாக அதாவுல்லாவிடம் மன்னிப்பு கேட்கலாம். இதுதான் இன்றைய முஸ்லீம் சமூகத்தின் நிலைப்பாடு.
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete
  2. தயவு செய்து இதை முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினையாக மாற்ற வேண்டாம்
    இந்த பிரச்சினை முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினை அல்ல
    ஒரு முஸ்லீம் சமூகமும் இந்த அதாவுல்லாவை முஸ்லிம்களின் பிரதிநிதியாக சென்று விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு அனுப்பவுமில்லை
    மனோ கணேசன் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமுமில்லை.
    மனோ கணேசன் மன்னிப்பு கேட்க வேண்டுமானால் நேரடியாக அதாவுல்லாவிடம் மன்னிப்பு கேட்கலாம். இதுதான் இன்றைய முஸ்லீம் சமூகத்தின் நிலைப்பாடு.
    மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete
  3. முஸ்லிம் சமூகத்திடம் முன்னாள் அமைச்சர் மனோ கனேசன் மன்னிப்பு கேட்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை என காட்ட வேண்டும். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மோசமான கலந்துரையாடல் தன்மையினையும் தவறான சொல்லாடலையும் மேற்கொண்டதை மலையக முஸ்லிம்கள் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    -கவிஞர் அஸ்கர் -

    ReplyDelete
  4. Hey kodaarigal, dont link this with muslim umma, Adha normally using barbarian words in the stage also, that his personnel, Mano als act like a Adha more than Adha so both are barbarian, so dont link this bullshit with Muslim or Tamil community

    ReplyDelete
  5. MR.ASKAR MANO GANESAN muslimgalidam maniipu ketka vendiya tevai illai endu solring anda NAI ABAYA,BURKAB,ARABIC lenguage inda natukkku tevai illa endu sonna podu nenga enga COMA la irundingala?

    ReplyDelete
  6. Let the cheaper actions of both individuals to themselves. it is their uncivilized moves have to be solved among them. don't connect it with innocent Muslims or estate peoples.

    ReplyDelete
  7. This has nothing to do with Muslims or Indian Tamils, just a personal rift between two individuals. What Adhaulla can do is make a complaint against Ganeshan. It is up to the Police department to decide whether to file assault charge against Ganeshan or not based on the evidence.

    ReplyDelete
  8. Indhe sattaththarani Ellam engirundhu kilamburaingalo....

    ReplyDelete
  9. Mydear bro Mr.amirlebbe mano tavara nadanthe santherpatthila naangal ethirppai kattinom athu ungalaipponre ulagam ariyadawarhalukku theriyaal erunthirukka koodum.

    ReplyDelete
  10. Sry earlier comment la rowthiram endu kurippituwatku padilaha name a maari potutan sry..so change the name editor plz.

    ReplyDelete

Powered by Blogger.