Header Ads



அனைவரும் நேரகாலத்துடன் சென்று, வாக்களிக்க வேண்டும்

-  அ.இ.ம.கா தலைவா் றிசாத் பதியுதீன் வேண்டுகோள்

ஜனநாயக நாடொன்றில் சர்வஜன வாக்குரிமை என்பது மிகப் பெரும் வரப்பிரசாதமாகும். உண்மையான ஜனநாயகம் வாக்குரிமையிலேயே தங்கியிருப்பதுடன், ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே தேர்தல்கள் அமைகின்றன.

எனவே நவம்பா் 16 ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைச் சமூகங்கள் தமது வாக்குகளை மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும். அனைவரும் தவறாது வாக்களிப்பதன் மூலம் சிறந்த தலைவா் ஒருவா் நமது நாட்டின் ஜனாதிபதியாவதை உறுதிசெய்ய வேண்டிய தார்மீகம்  நமக்குள்ளது, 

அந்த வகையில், தோ்தல் தினமான சனிக்கிழமை, நேரகாலத்துடன்  சென்று வாக்களிக்குமாறு  முஸ்லிம், தமிழ் சமூகங்களைச் சோ்ந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக கேட்டுக் கொள்கி்ன்றேன்.

அத்துடன், தோ்தல் சட்டங்களை மதித்துச் செயற்படுவதுடன், சுயாதீனமானதும் அமைதியானதுமான வாக்கெடுப்பை நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

சகல இன – மதங்களையும் சமமாக நோக்குகின்ற ஒரு முற்போக்கு தலைவா் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கும், இலங்கையா் அனைவரும் சௌஜன்யமாக வாழ்வதற்கும் இத்தோ்தல் வழிகோல வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

றிசாத்  பதியுதீன் (அமைச்சா்)
தேசியத் தலைவா்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். 

No comments

Powered by Blogger.