Header Ads



குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரித்து, பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை

அடுத்தவாரமளவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்த சதித்திட்டம் செய்திருப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த கட்சி அடியோடு நிராகரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை சீர்குலைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சேறுபூசும் பிரசாரமாக இதனைக் கருதுவதாகவும் அந்த கட்சி கூறியுள்ளது.

“ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை இலக்காகக் கொண்டு எதிர்வரும் வாரத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றை நிகழ்த்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சூழ்ச்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியான எச்சரிக்கையை மேற்கோள்காட்டி, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று 07 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், இந்த செய்தி வெளியானதன் பின்னர் தென்னிலங்கையில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த முறைப்பாடு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு தெளிவுபடுத்தல் கடிதமொன்றை இன்றைய தினம் அனுப்பிவைத்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் நடத்த சூழ்ச்சி செய்வதாக ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவினால் நம்பிக்கையற்ற டுவிட்டர் பதிவினை மேற்கோள்காட்டி முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவினால் 92 தடவைகள் தாக்குதல் நடத்தப்போவதாக முன்வைத்த எச்சரிக்கை மற்றும் வெளிநாட்டு உளவுப் பிரிவுகளால் வழங்கப்பட்ட எச்சரிக்கைத் தகவல்களை உதாசீனப்படுத்திய அரசாங்கத்தின் போக்கினால் தீவிரவாத தாக்குதலினால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகியமைக்கு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் டலஸ் அழகப்பெரும தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியின் விளிம்பில் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை சீர்குலைக்கும் முயற்சியின் ஓரங்கமாகவே இந்த முறைப்பாட்டைப் பார்க்க வேண்டியுள்ளது.

1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் சஜித் பிரேமதாஸவின் தந்தையான அமரர் ரணசிங்க பிரேமதாஸ இவ்வாறே போலிப் பிரசாரங்களை செய்தமை நினைவுக்கு வருகின்றது.

ஸ்ரீலங்காவின் மிகவும் தீர்க்கமிக்க பக்கத்தை கடந்துசெல்ல எத்தணிக்கும் இந்தத் தருணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவின் இந்தக் குற்றச்சாட்டு இந்த சந்தர்ப்பத்தை இரத்தத்தினால் கடத்தப்படுகின்ற நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆகையினால், அதுகுறித்து கவனம் செலுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.