Header Ads



நல்­லாட்­சி­யில்தான் அதி­க­ நிதி மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது - மஹிந்த

எனது ஆட்சி தேசிய நிதி மோச­டிக்கு துணை­போ­ன­தாக  விமர்­சிக்கும் நான்­கரை வருட  நல்­லாட்­சி­யில்தான் அதி­க­ள­வாக தேசிய நிதி மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­கா­லப்­ப­கு­தியில் பய­னற்ற வித­மாக பெற்றுக் கொண்­டுள்ள 6 ரில்­லியன்  அரச முறை கடன்­களை மீள் செலுத்த வேண்­டிய  பொறுப்பு தற்­போது எமக்கு காணப்­ப­டு­கின்­றது என எதிர்க்­கட்சித் தலைவர்  மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

பாணந்­துறை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு  கருத்­து­ரைக்­கையிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மக்­க­ளுக்கு சேவை­யாற்­றாத  அரச நிர்­வா­கத்­தி­னையே    பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச ஆகியோர் முன்­னெ­டுத்­தார்கள். கடந்த அர­சாங்­கத்­தி­னையும் எனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளையும் பழி­வாங்­கவே அதிக கவனம் செலுத்­தப்­பட்­ட­மை­யி­னா­லேயே  நாட்­டுக்கு எவ்­வித சேவை­யி­னையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பெறு­பேறு  மத்­திய  வங்கி பிணை­முறி கொடுக்கல் வாங்­கலின் ஊடாக வெளிப்­பட்டு விட்­டது. கடந்த அர­சாங்­கத்­தினை திருடன் என்று விமர்­சித்து தேசிய நிதி­யினை அர­சாங்கம் கொள்­ளை­ய­டித்­துள்­ளது. இதன்  விளை­வினை நாட்டு மக்கள் இன்று எதிர்கொள்­கின்­றார்கள்.

எமது ஆட்­சியில் அரச முறை கடன்கள் பெற்றுக் கொள்­ளப்­பட்­டன. இதனை மறுக்­க­வில்லை. 30வருட கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வரவும், யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டதை தொடர்ந்து அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்­கவும் 5 ரில்­லியன் நிதி மாத்­தி­ரமே கட­னாக பெற்றுக் கொள்­ளப்­பட்­டது. ஆனால் நான்­கரை வருட  கால நிர்­வா­கத்தில் அர­சாங்கம் 6 ரில்­லியன்  அரச முறை கடன்­களை பெற்­றுள்­ளது. ஆனால் எவ்­வித அபி­வி­ருத்­தி­களும் முன்­னெ­டுக்­கப்­படவில்லை. மக்­களின் வாழ்க்கைத்  தரமும் முன்­னேற்­ற­ம­டை­ய­வில்லை.

இவ்­வாறு பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட கடன்­களை நாங்­களே மீள செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. மக்­களின் வாழ்க்கை செல­வுகள் அதி­க­ரிக்கும் போது  ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச எவ்­வி­த­மான கருத்­துக்­க­ளையும் தெரி­விக்­க­வில்லை. ஆனால்   தற்­போது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி, மக்­களை ஏமாற்­று­கின்றார்.   இம்­மு­றையும் நாட்டு மக்கள் ஏமா­ற­மாட்­டார்கள் என்­பதை  பிர­தமர் ரணிலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள மக்களுக்கு  நிச்சயம் எமது நிர்வாகத்தின் முதல் காலாண்டில் நிவாரணம் வழங்கப்படும். தேசிய  பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சாதாரண மக்களை ஒருபோதும் நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம் என்றார்.

1 comment:

  1. எல்லா ஆட்சியிலும் நிதி மோசடிதான். அதற்குத்தான் வாறீங்களே.
    அடுத்தது உங்கட ஆட்சிலேயும் நிதி மோசடி என்று ஒத்துக்கொண்டேல். தேங்க்ஸ்.

    ReplyDelete

Powered by Blogger.