November 08, 2019

கொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”

“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”

ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்...
நோயாளியை இறக்கியவுடன் வாகனத்தை வெளியில் கொண்டு செல்லுமாறு பணித்தனர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்...

சரி...இப்போது உங்கள் வாகனத் தரிப்பிடம் காலியாக இருக்கிறதே... நோயாளி எப்படி உள்ளே செல்வார்... நான் உள்ளே அவரை அனுமதித்து வெளியே வருகிறேன் என்று நான் கூறியபோதும் அவர்கள் ஏற்கவில்லை...

அது மேலிடத்து உத்தரவாம்... 

சரி அது பகல் வேளையில் பொருந்தினாலும் இந்த இரவு 10 மணிக்கு உள்ளே இடம் இருப்பதால் அனுமதிக்கலாமே... இங்கே வாகனங்களே இல்லையே.. என்றேன் நான்...அவர்கள் ஏற்கவில்லை...
“இது அநீதி... சுகாதார அமைச்சரிடம் நான் நீதி கேட்பேன்...” என்றேன் நான்... “ யாரிடமாவது பேசும்...” என்றார் ஒரு அதிகாரி..

நான் உள்ளே சென்று நோயாளி அனுமதிக்காக காத்திருந்தபோது உள்ளே வந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சத்தமாக பேசினார்... “ மனிதத் தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்..” என்றேன் நான்...

இதற்கெல்லாம் காரணம்... அவர்கள் என்னை ஒரு முஸ்லிமாக நினைத்துக் கொண்டனர்...

“ தம்பிலாட்ட எஹ்ம கதாகரன்ன பே ...” என்று உத்தியோகத்தர் ஒருவர் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தபோது தான் மேட்டரே புரிந்தது...

நான் முஸ்லிம் என்று நினைத்து பொங்கியெழுந்து நின்றனர்.(தம்பியா என்று இளக்காரமாக அவர்கள் விளித்த போது அவர்களுக்கே பொறுப்பாக இருக்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் என் மனதுக்குள் வந்து சென்றார்... அதை விடுவோம்....)

நான் நீளக்கை சேர்ட் அணிந்திருந்தபடியால் கையில் கட்டியிருந்த கோவில் நூலை அவர்கள் கவனிக்கவில்லை போலும்...

லேடி ரிஜ்வே பாதுகாப்பு ஊழியர்கள் இப்படியென்றால் வேலை செய்வோர் நடந்துகொள்ளும் விதம் படுமோசம்... நோயாளர்கள் மிருகங்களை போல நடத்தப்படுகிறார்கள்... ஒரு இருவரைத் தவிர மற்றவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படுமோசம்...

முஸ்லிமை ஒருவிதமாகவும் தமிழனை மற்றோருவிதமாகவும் சிங்களவரை இன்னொருவிதமாகவும் கவனிக்கும் இந்த நாடு எப்போது உருப்படப்போகிறது...

அது ஒருபுறமிருக்க - இந்த வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் - குழந்தைகள் பயன்படுத்தும் மலசல கூடத்தை பார்த்தால் அங்கு ஒரு புதிய நோய் தொற்றிக்கொள்ளும்..( அந்த படங்களை இணைத்திருக்கிறேன்..)

சுகாதார அமைச்சரே... சுகாதார இராஜாங்க அமைச்சரே இதுதான் உங்கள் அமைச்சின் இலட்சணமா...? இந்த அரசில் இருக்கும் தமிழ் - முஸ்லிம் அமைச்சர்மாரே இதுதானா உங்கள் அரச இயந்திரத்தின் மறுபக்கம்? நேற்று இரவு வைத்தியசாலையின் சி சி ரி வி படங்களை பாருங்கள்... என்னை ஒரு தீவிரவாதியை ட்ரீட் பண்ணியது போன்ற பாதுகாப்பு ஊழியர்களின் செயற்பாடுகளை கண்டு ரசியுங்கள்...

“ மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”

 - Sivarajah Ramasamy -

5 கருத்துரைகள்:

அருமையான கருத்து! நன்றி! கட்டுரை சிறியதாயினும் பெரிய கருத்து பொதிந்திருக்கிறது. இந்நாட்டின் பிரதி அமைச்சருக்கு இது புரியுமா?

அருமையான கருத்து! நன்றி! கட்டுரை சிறியதாயினும் பெரிய கருத்து பொதிந்திருக்கிறது. இந்நாட்டின் பிரதி அமைச்சருக்கு இது புரியுமா?

இந்த விஷயத்தை டாக்டர் ராஜித அவர்களிடம் முறையிடுங்கள். இது நல்ல தேர்தல் கால சந்தர்ப்பம்.

வைத்தியசாலைகளோ வைத்தியர்களோ அவரது கட்டுப்பாட்டில் இல்லை எனபது ஓர் உண்மை!

முதலில் இந்த விடயத்தை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஜக்கிய நாடுகளின் இலங்கையில் உள்ள உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஜக்கிய நாடுகளின் சிறுவர் பிரிவு என்பவற்றுக்கு ஆதாரத்துடன் முரையிடுங்கல்.

Post a Comment