Header Ads



சந்திரிக்கா புத்துசாதுரியமாக, செயற்பட வேண்டும் - மகிந்த அறிவுரை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது புத்துசாதுரியமாக செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்தளை – நாவுல பகுதியில் இன்று -02- ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதாக கூறிவருகிறார்.

அவர் கட்சியிலிருந்து சிலரை அழைத்துக்கொண்டு புதிய கட்சியொன்றினை உருவாக்கும் போது தாமே அதனை பாதுகாத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தனது ஆட்சிக்காலத்தின் போதே 127 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் அங்கத்துவம் வகித்தார்கள்.

அதுமட்டுமல்லாது சகல மாகாணசபைகளும் தமது கட்சியின் அதிகாரத்தின் கீழ் செயற்பட்டது.

ஆகவே தமது ஆட்சிக்காலமே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொற்காலமாகும் என மகி;ந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதாக பொய்களை கூறவேண்டிய அவசியமில்லை.

அதனை மக்கள் பாதுகாப்பார்கள்.

இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்னும் அறிவுகூர்மையுடன் செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. SHE IS THE ONE GIVEN YOU PRESIDENT ELECTION CONDIDATE ON 2005

    ReplyDelete

Powered by Blogger.