Header Ads



மைத்திரிபாலவுக்கு மனச்சாட்சி இருக்கா...?

2005 ஆம் ஆண்டு ராஜகிரிய றோயல் பார்க் எப்பார்ட்மென்ட்டில் 19 வயது யுவோன் என்ற இளம் யுவதியை கொலை செய்த குற்றத்திற்காக 2012 ஆம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஷ்ரமந்த ஜெயமஹா என்ற இளைஞரை “ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து” விடுதலை செய்திருக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

19 வயதில் கைதான அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக தனது இந்த பதவிக்காலத்தின் இறுதியில் காரணம் வேறு கூறியிருக்கிறார் சிறிசேன...

ஆனால் தனது சகோதரியின் மரணம் எப்படி நடந்தது, எப்படி கொல்லப்பட்டார் - அதிகாரமும் பணமும் இறுதியில் வென்றதாக யுவோனின் சகோதரி மறுபக்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட வர்த்தகர்களை - அதில் சம்பந்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கில் போடாமல் விடமாட்டேன் என மார்தட்டி கூக்குரலிட்ட பொய்யர் சிறிசேன , இப்போது ஒரு கொலையாளியின் மரணதண்டனையை நீக்கி பெரும் அவமானத்துடன் தனது பதவிக்காலத்தினை நிறைவு செய்கிறார்...

அப்பாவி அரசியல் கைதிகள் சிறையில் வாடும்போது அவர்களின் நன்னடத்தை சிறிசேனவுக்கு தெரியவில்லை... தமிழர்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டோமே... ஒருவரையாவது விடுவித்து அவர்களிடம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவோம் என்ற ஒரு சிந்தனை வரவில்லை...
சிறிசேனவின் பதவிக்காலத்தை நினைவூட்டி அவரின் நல்லவற்றை எழுதலாம் என்று யோசித்திருந்தேன்... ஆனால் அதை செய்யாமல் ஆக்கிவிட்டார்...

“எப்போதும் என்னை தொடர்புகொள்ளலாம்” -“ எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்..” என்று சொன்ன சிறிசேனவை தொடர்புகொள்ள நான் கடந்த சில வாரங்களாக முயற்சி செய்தாலும் பலன் இல்லை. அவரின் இல்லத்திற்கு தொலைபேசி அழைப்பை எடுத்தாலும் அவர் அங்கே இருக்கிறார் இங்கே இருக்கிறார் என்று பல தடவைகள் சாட்டுக்களே பதிலாக வந்தன...

எந்த முகத்தில் பேசுவது என்று நினைத்தாரோ தெரியவில்லை...

மிஸ்டர் பிரசிடெண்ட்.. இலங்கை வரலாறில் உங்களுக்கு கிடைத்தது போன்ற ஒரு பொன்னான வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்கவேயில்லை.. இனி வரலாறில் யாருக்கும் கிடைக்கவும் மாட்டாது... இருந்தாலும் உங்களைப் போன்ற ஒரு ஜனாதிபதி மீண்டும் கிடைத்துவிடக் கூடாது..

இரண்டு தடவைகளுக்கு மேல் நீங்கள் பதவிக்காலத்தில் இருப்பீர்கள் என்று நினைத்தாலும் முதற்காலத்திலேயே முகம்காட்ட முடியாமல் வெளியே போகும் அளவுக்கு வந்திருக்கிறீர்கள்...

மக்கள் உங்களை மன்னித்தாலும் உங்களின் மனச்சாட்சி உங்களை மன்னிக்காது.. வரலாறும் தான்..

குட் பை...!

Sivarajah Ramasamy

3 comments:

  1. சிறைச்சாலை வண்டியில் ஏற எத்தனித்துதே அந்த பிஞ்சு குழந்தை.
    அந்த மனிதனையாவது விடுவித்திருந்தால், உலகம் இல்லாவிடினும் ஒரு சில மக்களாவது ஜனாதிபதியை வாழ்த்தி இருப்பார்கள்.
    இனவாதிகளை இறைவன்தான் திருத்த வேண்டும்.

    ReplyDelete
  2. Mental அந்த சின்னசிறு குழைதைகளின் தந்தையை விடுதலை செய்டா நாயே.

    ReplyDelete

Powered by Blogger.