Header Ads



மசாஹிமாவின் குடும்பத்தினருக்கு வாக்குறுதி வழங்கியவர்களே, உடனடியாக அதனை நிறைவேற்றுங்கள்


இன்று (04/11/2019) மசாஹிமாவின் தர்மச்சக்கர வழக்கு” மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விளக்கத்திற்காக எடுக்கப்பட்ட போது கசக்கல பொலிஸ் பொறுப்பதிகாரி (OIC)”சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை எமக்கு கிடைக்கவில்லை” எனும் வழமையான பல்லவியை பாடினார்.

நாம் வாக்குறுதி அளித்தபடி மசாஹிமாவுக்காக மன்றில் தோன்றி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மீதான தகவல்களை அறிவித்ததுடன் , சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான இறுதி திகதியை வழங்குமாறு கேட்டுக்கொண்டோம்.

அதற்கிணங்க நீதவான் வழக்கை எதிர்வரும் 18/05/2020 ற்கு ஒத்திவைத்தார். அல்ஹம்துலில்லாஹ்.

சரி விடயத்திற்கு வருகிறோம்.

மசாஹிமாவின் கைது மற்றும் விடுதலையின் பின் நூற்றுக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு தனவந்தர்கள் எமக்கு மற்றும் மசாஹிமாவின் குடும்பத்திற்கு call பண்ணி அவர்களுக்கான வீட்டுத்தேவையை பூர்த்தி செய்வதாக வாக்குறுதிகளை அளித்திருந்தனர்.

வாக்குறுதியளித்தவர்களில் சதகா பவுண்டேஷனால் வழங்கப்பட்ட உதவியினால் வீட்டின் அரைவாசி வேலையை மசாஹிமா குடும்பம் முடித்துள்ளனர்.

வாக்குறுதிகளை நம்பி ஆரம்பித்த வீட்டு வேலைகளை முடித்துக்கொள்ள முடியாமல் மழையில் நனைந்து விரக்தியின் உச்சிக்கே வந்த மசாஹிமா குடும்பம் இன்று நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கி நின்றது.

“எமது சமூகம் கண்கலங்குவது” எமக்கு பிடிக்காத விடயமென்பதால் எவரிடம் கேட்டால் உடனடி தீர்வு கிடைக்கும் என்பது எமக்கு தெளிவிருந்தமையால் எனது நண்பன் அமைச்சர் ரிஷாத்திற்கு தொலைபேசி மூலம் விபரங்களை கூறிய போது உடனடியாக ரூ.200,000/ வை எனது வங்கிக்கணக்கிற்கு அனுப்பி அப்பணம் உடனடியாக என்னால் மசாஹிமாவிடம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ! சற்றும் எதிர்ப்பாக்காமல் கிடைத்த உதவியை ஆனந்தக்கண்ணீருடன் பெற்றுக்கொண்ட மசாஹிமா குடும்பம் எமக்காகவும் நண்பன் ரிஷாத்திற்காகவும் துஆ செய்தது.

இறைவனின் உதவியால் நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு (இலவசமாக வழக்காடுதல்) மேலதிகமானவைகளையும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய நீங்கள் ??!!!

அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்.

சட்டத்தரணி சறூக் -கொழும்பு

4 comments:

  1. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.
    உங்களின் உதவி என்றென்றும் இச்சமூகத்திற்கு கிடைத்துக்கொண்டே இருக்கட்டும். அல்லாஹ் அதற்குரிய எல்லா சக்தியையும் நீண்ட ஆயுளையும் உங்களுக்கு தந்திடுவானாக ! ஆமீன்!

    ReplyDelete
  2. அமைச்சர் ரிசாட்,சரூக் லோயர் உங்கள் இருவரின் செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வான்,இன்னும் இன்னும் நீண்ட ஆயுளையும்,சிரந்த உயர்ந்த வாழ்க்கையும் தருவான்.

    ReplyDelete
  3. சட்டத்தரனி சருக் அவர்களே உங்களின் தொலைபேசி இலக்கத்தை கொஞ்ஞம் இன்னோரு உங்கள் ஆக்கத்தின் போது பதிவிட்டால் மிகப் பெரும் உதவியாய் பாதிக்கப்படும் மக்களுக்கு இருக்கும்.

    ReplyDelete
  4. lawyer zarook sir 0771884448

    ReplyDelete

Powered by Blogger.