Header Ads



சஜித் - கோத்தா சமநிலையில் உள்ளனரா..? வெளிநாட்டு தூதரகங்கள் நடாத்திய கருத்துக் கணிப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் சமநிலையில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சமூக ஊடகங்களில் தாங்களே முன்னிலை வகிப்பதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

எவ்வாறெனினும், வெளிநாட்டு தூதரகங்கள் நடாத்திய கருத்துக் கணிப்புக்களின் மூலம் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சமநிலையில் இருப்பதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குலக நாடு ஒன்றின் தூதரகம் கடந்த வார இறுதியில் நடத்திய கருத்துக் கணிப்பின் பிரகாரம் எந்தவொரு பிரதான வேட்பாளரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இன்னும் உருவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், வடக்கு கிழக்கில் கிடைக்கப்பெறும் ஆதரவின் ஊடாக சஜித் பிரேமதாச, கோத்தபாயவை பின்தள்ளி முன்னிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 comment:

  1. These statistics are unreliable.even big big channels deducted Hillary Clinton's victory and Trump won the electon.???

    ReplyDelete

Powered by Blogger.