November 11, 2019

இம்முறை ஒரு தடவையாவது, மஹிந்த குடும்பத்திற்கு வாக்களித்துப் பார்ப்போம் - அதாவுல்லாஹ்

ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு அமைச்சைப் பொறுப்பேற்ற அடுத்தடுத்த நாட்களிலேதான் நாட்டில் அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டதை இந்த நாடு இன்னமும் மறந்து விடவில்லை என முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொதுஜன முன்னனியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அத்தனை அட்டூழியங்களையும், அழிவுகளையும் அவர்கள் திட்டமிட்டுத்தான் செய்து முடித்தார்கள்.

ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு அமைச்சராகப் பதவிப் பொறுப்பேற்று மூன்றாம் நாளே முஸ்லிம்களுக்கெதிரான அடாவடித்தனங்களை ஆடி முடித்தார்கள்.

திகனயில் அறிவித்தல் பலகை இட்டு வாகனத்திலே அந்தக் கும்பல்கள் ஏறியமர்ந்து கொண்டு தாங்கள் ஒவ்வொரு அமைப்பு எனக் கூறிக்கொண்டு பட்டப்பகலிலே பாதுகாப்போடு அடித்து, அழித்து முடித்தார்கள். அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்தார் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்ரமசிங்க.

தன்னுடைய பலவீனங்களை மறைத்து கிழக்கு உட்பட நாட்டின் அத்தனை வளங்களையும் அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்து குளிர்காய்பவர்தான் ரணில். ரணில் தலைமையிலான அரசு முஸ்லிம் சமுதாயத்தை தங்களது நலனுக்காக பாவித்திருக்கிறார்கள்.

ஸஹ்ரான் என்ற நபர் முஸ்லிமை, இஸ்லாத்தை, இஸ்லாமிய வழிகாட்டியான புனித அல்குர்ஆனை கொஞ்சமேனும் புரிந்துகொண்டவரல்ல.

குர் ஆனும், இஸ்லாமும் சரியாக வழிகாட்டக் கூடியவை. ஆனால் அவர்களால் தயார்படுத்தப்பட்ட ஸஹ்ரானுக்கு அல்குர்ஆனைப் புரியவில்லை, இஸ்லாத்தைப் புரியவில்லை, மனித நேயம் புரியவில்லை. அப்படிப்பட்ட ஒருவரை வைத்து நம்மை, நம் சமூகத்தை வெளிப்போக வைத்து விட்டார்கள். ஆகவே, இப்படிப்பட்டவர்கள் ஆட்சியை அலங்கரிக்க இனியும் இடமளிக்கமுடியாது.

எனவே, இனியும் இந்த சதிகாரர்களின் வலையில் வீழ்ந்து விடாது இம்முறை ஒரு தடவையாவது இந்த மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்திற்கு வாக்களித்துப் பார்ப்போம் என்றும் உங்களையும் வாக்களிக்குமாறும் உங்கள் கால்களில் விழுந்து நான் கேட்கின்றேன்.

கடந்த கால யுத்த வரலாற்றிலே வடுக்களை சுமந்த கிராமங்களாக வாழைச்சேனையும் மூதூரையும் நினைவு படுத்துகிறேன் வாழைச்சேனை பஸார் தீயிட்டு கொழுத்தப்பட்டது மாத்திரமின்றி வர்த்தக நிலையங்களில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டது. அதனையும் விட கவலையான விடயம்

தமிழ் பிரதேசத்திற்கு சமையலுக்கு சென்ற இரண்டு சகோதரர்கள் கொலைசெய்யப்பட்டு அவர்களது உடல்களை நாம் பெறமுடியாமல் அச்சகோதரர்களது உடல்கள் எமது கண்முன்னே எண்ணை ஊற்றி மறக்கமுடியாத வடுவுக்கு உரிய பிரதேசம் வாழைச்சேனை பிரதேசம் சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.

எமது நாட்டில் தமிழர்களும் முஸ்லீம்களும் சந்தோசமாக வாழ்வதற்கு துடித்துக் கொண்டு இருந்தோம் அப்போதுதான் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஸவிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் முதலாவது இந்த நாட்டில் புரையோடிப்போயிருந்த பயங்கரவாதத்தை ஒழித்துத் தாருங்கள். இரண்டாவது வடக்கையும் கிழக்கையும் தனித்தனி மாகாணமாக பிரித்து தாருங்கள் மூன்றாவதாக எல்லா மக்களையும் நிம்மதியாக வாழ வைக்கக்கூடிய ஒரு யாப்பை உருவாக்கித்தாருங்கள் என்று கேட்டோம்.

அப்போது அதிகமானவர்கள் மஹிந்த ராஜபக்ஸவை நாட்டின் தலைவராக நியமிப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கும் போது முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மறைந்த தலைவர் அஷ்ரப் மரணிக்கும் வரை ரணிலைப்பற்றி சொன்னார்.ரணிலினுடைய அத்தனை காரியங்களையும் அவர் ஹக்கீமைக் கொண்டு செய்வித்தார். ஆனால் தலைவருடைய பாட்டு மற்றும் தலைப்பாகைகளை மாத்திரம் பாவித்தார்கள்.அஷ்ரபுடைய வழிகாட்டல் அவரது ஆலோசனை என்பவற்றை எமது சமுதாயம் கடைப்பிடிக்கவில்லை.

2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். அதில் முஸ்லீம் சமுகம் பங்காளியாக இருக்கவில்லை. ஆனால் 2010ம் ஆண்டு யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் பிரிந்து நாடு முழுவதும் எத்தனை பாலங்கள் அமைத்து நாடு ஒரு காலமும் கண்டிராத சேவைகள் செய்வதற்கு நிருவாக ரீதியாக பஷில் ராஜபக்ஸ, பாதுகாப்பு ரீதியாக கோத்தபாய ராஜபக்ஸ, தலைவராக மஹிந்த ராஜபக்ஸ இருந்துதான் அத்தனை பணிகளையும் நாங்கள் நிறைவேற்றி மக்களை நிம்மதியா கடலுக்கு செல்வதற்கு அச்சமின்றி வயல்களுக்கு செல்வதற்கு பாடசாலைக்கு பிள்ளைகளை அச்சமின்றி அனுப்புவதற்கு யுத்தத்தை முடித்து உதவிசெய்தவர்கள்.

இந்த நாட்டின் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் என அனைவரும் ஏகோபித்த குரலில் புது யுகம் படைக்க புறப்படும் பொழுது அதில் முஸ்லிம் சமூகமும் தனது பங்களிப்பை முழுமையாகச் செய்து இந்த நாட்டு மக்களின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

8 கருத்துரைகள்:

கடந்த நான்கு வருட நல்லாட்சியில்தான் அதிக அட்டூலியங்கல் முஸ்லிம்கலுக்கு எதிராக நடந்தது என்பது உண்மை.ஆனால் அதை நடத்திய அனைத்துக் கும்பலும் தற்சமயம் இறுதியில் யாரிடம் சேர்ந்துள்ளது,யார் தற்பொது அவர்களை அருகில் வைத்துக் கொண்டிருப்பது.எனவே இதில் இருந்து என்ன புரிகிரது? எனவே அனைத்தும் தெரிந்தும் எவ்வாறு இப்படி பேச முடிகிறது?

IT WILL BE GOOD FOR THE ALL CEYLON JAMIYYATHUL ULEMA AND THEIR MOULAVIS (not all Moulavis) NOT TO ACT DECEPTIVELY ON FRIDAY THE 15th., NOVEMBER 2019, Insha Allah.
“The Muslim Voice” vehemently hopes and prays that the All Ceylon Jamiyyathul Ulama and it’s members will “STRICTLY” follow “point 07” of the guidelines stipulated statement issued please, Insha Allah, which they have published – http://www.ft.lk/.../ACJU-issues-guidance-with.../56-688638

In the last Presidential elections and general elections, though similar indications were made, The All Ceylon Jamiyyathul Ulama violated all election norms and preached from the “MIMBAR” in all mosques to vote against the SLFP, Mahinda Rajapaksa and the UPFA aggressively on the last Friday (Jumma prayers) before the polling day. 16th., November is a Saturday and 15th., November is a FRIDAY.
Let the people, especially the Muslim Vote bank who love our “MAATHROOBUMIYA” patiently wait and see what The All Ceylon Jamiyyathul Ulama and their “Moulavis” do on November 15th., Friday Jumma prayers, Insha Allah. If they attemp to break the Elections Law, the EC or the police should be immediately informed, Insha Allah.
IT WILL BE GOOD FOR THE ALL CEYLON JAMIYYATHUL ULEMA AND THEIR MOULAVIS (not all Moulavis) NOT TO ACT DECEPTIVELY ON FRIDAY THE 15th., NOVEMBER 2019, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

இவனுக்கு தேவை ஒரு போனஸ் ஆசனம். இவனால் இனி தேர்தலில் வென்று பாராளுமன்றம் செல்ல முடியாது. ஆகவே சமூகத்தை கூட்டிக்கொடுத்தாவது போனஸ் ஆசனம் பெறவேண்டும்

தமிழ் பிரதேசத்துக்கு சமையல் சென்ர இரண்டு சகோதரர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான எமது மக்களை கொலை செய்தவர்கள் உள்ள அதே அனியில்தானே நீங்களும் இருக்கிறீர்கள்.

Dear Athaullah you are at the wrong side, and don't make confront politics with UNP. You have to balance your approach. Be diplomatic.

Talk something new and forget about the antic stuff.

ஆண் ஆண்மை கொண்டவனாக இருப்பது ஆட்சி செய்வதற்கு இன்றியமையாதது. கடந்த நான்கரை வருட ஆட்சியில் இதன் எதிர்விளைவுகளை சந்தித்தோம்.மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்தால் மீண்டும் மீண்டும் அடிதான்.மாறி மாறி ஆட்சியை அமைக்கும் போது அது நம்மபக்கம் சார்ந்து வரும்.
கடந்த முறை நம்ம தலைவர்கள் மக்கள் வந்த பின் ஓடிவந்து ஒட்டிக்கொண்டார்கள்.இம்முறை எதிர்க்கட்சியில் இருக்கவிட்டு பாடம்புகட்டுவோம்.

Ataullah..pls talk with sense.did u utter a word during aluthgama riot.qe wear against a family dynasty.u also want a family dynasty for your family in akp and u are with the same concept awaiting a national.list.sajith would win and because of you innocent public will be sidelined.akp people are more intelligent than you.u have done services to AKP.but that does not mean that they are to listen to you all the time.

மடத்தனமான பேச்சு அதனால் grupil மஹிந்த இருக்கிறாய்

Post a Comment