Header Ads



ஹக்கீம், றிசாத், ஹிஸ்புல்லா போன்றவர்களை உடன் கைதுசெய்யுங்கள் - பிக்குமார்கள் கூட்டாக கோரிக்கை

முன்னாள் அமைச்சர்களான ரிஸாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, ஹிஸ்புல்லா போன்றவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பௌத்த பிக்குமார்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளரான ஷாணி அபேசேகரவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“கடந்த காலங்களில் ரிஷாட், ஹக்கீம், ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்கள் மிகவும் இனவாதிகளாகவே செயற்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தை இந்த நாட்டின் வேறே ஒரு பகுதியாக இயக்கப்பார்த்தார்கள்.

இயற்கை மரங்களை அழித்துவிட்டு சவூதி அரேபிய மரங்களை இங்கே நட்டார்கள். இவர்கள் கடுமையாக இனவாதத்தை விதைத்துவந்தனர். அதேபோன்று திருடர்கள் நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்.

ரிஷாட் போன்றவர்கள் புறம்பான திருடர்கள். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. அதேவேளை நிஷாந்த டி சில்வா போன்றவர்கள் இன்று நாட்டிலிருந்து தப்பிச்செல்லும் நிலை உள்ளது. அவருக்கு உதவி செய்தவர்கள் இருக்கின்றனர்.

அவருக்கு அங்கே வீடு வழங்கப்பட்டுள்ளது. மாதாந்தம் செலவுக்குப் பணம் வழங்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் நிஷாந்த டி சில்வா, வெளிநாடுகளுக்கு எவ்வளவு இரகசிய தகவல்களை வழங்கியிருக்கக்கூடும்.

அதேபோல இரகசிய பொலிஸார் இந்த நாட்டிற்காக அல்லது வெளிநாடுகளுக்கா பணிபுரிந்திருக்கிறார்கள் என்கிற சந்தேகம் நிலவுகிறது.

அதன் முன்னாள் பொறுப்பதிகாரி ஷாணி அபேசேகரவை கைது செய்தால் பல இரகசிய தகவல்களையும் அம்பலப்படுத்த முடியும் என நம்புகிறோம்.

ஜெனிவாவில் எமக்கெதிராக சகல இரகசிய தகவல்களுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும்.

மங்கள சமரவீர போன்றவர்கள் அங்கு சென்று எமது நாட்டுப் படையினருக்கு எதிராக ஓரடி எடுத்துவைக்கும்போது அதற்கான சூழலை இங்கே உருவாக்கிக் கொடுத்திருப்பது ஷாணி அபேசேகர போன்றவர்களாகும்.

ஆகவே சட்டமா அதிபர் திணைக்களத்திலும் சிலர் இவ்வாறு செயற்படுபவர்கள் இருக்கின்றனர். பொய்யான தகவல்களை முன்நிறுத்தி பிக்குமார்களை சிறைதள்ளியுள்ளனர்.

எனவே பிரதான நபர்களான ஷாணி அபேசேகர, ஹக்கீம், ரிஷாட், ராஜித உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.