November 06, 2019

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது - முஜிபுர் ரஹ்மான்

-          இர்ஷாத் றஹ்மத்துல்லா -

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத செயற்பாடுகள்  தற்போது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்மையானது  கோட்டாபய ஜனாதிபதியாக ஆக்குவதற்கு என தெரிவித்துள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த இனவாதிகளின் இயக்குநராக இருப்பவர் கோட்பயவே,எனவே இவரது கபட நாடகத்தை நாட்டு மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறினார்.

கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  அமைப்பாளரும்,முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஹம்மத் பாயிஸ் தலைமையில் நேற்று வெல்லம்பிட்டியில் இடம் பெற்ற சஜித் ஆதரவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான முஹம்மத் பைரூஸ்,அர்சத் நிசாம்தீன்,முஹம்மத் அக்ரம்,கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நௌபர் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேலும் அவர் உரையாற்றுகையில் –

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீதும்,மத வழிபாட்டு தளங்கள் மீதும், இனவாதிகள் தாக்குதலை நடத்தினார்கள்.குறிப்பாக அழுத்கம இதன் பிற்பாடு பல பிரதேசங்கள் இந்த வன்செயல்களினால் பாதிக்கப்பட்டது.இதனது சூத்திரதாரியாக இருந்தவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

வைத்தியர் ஷாபி தொடர்பிலும்,அவரது இஸ்லாமியன் என்பதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட  விசமப் பிரசாரங்களின் பின்னணியில் இருந்து செயற்பட்டவர் சன்ன ஜயசுமன என்பவர்,இப்போது அவர் கோட்டபயவின் அணியில் இருக்கின்றனர்.முஸ்லிம்களின் செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டுவரும் பௌத்த மதத் துறைவி இன்று யாருக்கு ஆதரவு வழங்குகின்றார்.இது போன்று இன்னும் எத்தனை பேர்கள் கோட்டாபயவின் கூடாரத்தில் இருக்கின்றனர்.இப்படிப்பட்ட இனவாதிகளுக்க வாக்களிக்குமாறு கோறுகின்றனர்.

சில முஸ்லிம் யெபர் கொண்டவர்கள்,அதுவும் சட்டத்தரணி தொழிலினை செய்கின்ற ஒருவர் இப்போது மக்கள் மத்தியில் தோன்றி கோட்டபய சிறந்த நேர்மையானவர் என்று கூறுகின்றார்.அழுத்கட பகுதியில்  அமைந்திருந்த வீடுகளை கோட்டபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது  உடைத்து அகற்றினார்.இது சரியென வாதிட்டவர் தான் இந்த சட்டத்திரணி,இன்று கோட்டாபயவுக்கு முஸ்லிம் மக்கள் மீது பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.நான் தான் முஸ்லிம்களின் தோழர்,ஆட்சிக்கு வந்தால் உங்களை பாதுகாப்பேன் என்று கூறுகின்றார்.இவரது பாதுகாப்பை எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

ஏப்ரல்  மாதத்தில் சஹ்ரான்  தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்ன,ஜனாதிபதி தேர்தல் நடை பெற இருக்கும் 6 மாதத்திற்கு முன்னர் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது.இப்படியென்றால் இதனை இயக்கிவர்கள் யாராக இருக்க முடியும் என எம்மில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.காட்டில் மிருகத்தை வேட்டையாட கட்டுத்துவக்கு கட்டுவார்கள்.ஆனால் அதனை கட்டுகின்றவர்கள் யார் என்று தெரியாது.மிருகம் அதில் அகப்பட்ட பிறகு அதனை தோழில்  சுமந்து  செல்பவரை தான்  கைது செய்வார்கள்.இந்த நிலை தான் இந்த சஹ்ரானின் விடயத்தில்,இந்த பயங்கரவாதத தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுடன்,ஒரு போதும் இஸ்லாமிய சமூகம் இதனை அங்கீகரிக்காது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதன் போது கூறினார்.

3 கருத்துரைகள்:

முற்றிலும் உண்மை. நல்லது மு.றகுமான் அவர்களே. நீங்களும் எதிர் காலத்தில் முஸ்லிம் மக்களோடு அரசியல் பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடிக்கடி வந்து இப்படியான நல்ல கருத்துக்களை எம் மக்களுக்கு எடுத்து கூறுங்கள் - அதட்க்கான நடவடிக்கையையும் எடுங்கள்.அல்லாஹ் எம் சமூகத்தை பாதுகாக்க போதுமானவன் -மர்சூக் மன்சூர்- தோப்பூர்


Mujeebu Rahuman (Cassim) will make big speeches on stages to support "Sajith" because all of them have been well taken care by the Yahapalana government and the foreign interests who are giving them large amounts of funding to keep their mouth shut and NOT disturb the government. These are Muslim politicians who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEOLOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the nearly last 5 years.

MP Mujeebu Rahuman, by making these speeches in support of "Sajith" at an SLMC organized political meeting wants to show that he is the champion of the fight to regain the lost achievements of the community over the past 20 years as he states in some of his press releases. Doing so, he is thereby trying to DUPE the Jamath of the Muslims living in Colombo Central so that Mujeebu Rahuman can go to them and dupe them again to vote for "HANSAYA/SAJITH PREMADASA" at the forthcoming Presidential elections. These fellows are the “POLITICAL CULPRITS of our innocent Community at large. He is doing this is to cover-up his own "DEFAULTS" of deception and hoodwinking Mujeebu did during all his political campaigns, being a member of many political parties during the bygone local elections and during the 2010 and 2015 Presidential and General elections. The TRUE STORY is that the UNP has decided to remove ineffective and non-productive Electoral Organizers in the near future and Mujeebu Rahuman falls within that category.
Other Muslim MP’s and Ministers are doing the same thing to deceive the innocent Muslim voters. In the Bathiya Mawatha Mosque issues what Minister Sagala Ratnayake, PM. Ranil Wickremesinghe, Yahapalana Muslim Ministers Rauf Hakeem, Rishad Bathiudeen, Faizer Musthapa and MP’s, Mujeebu Rahuman and the loud mouthed Azad Sally had stated “was pure bluffing the Bahatiya Mawatha Jamath, Dambulla Mosque, Digana issue, Abaya issue, Halal issue etc. etc. They told the same thing about Wilpattu to the Mannar and Jaffna IDP’s. They told the "Long stories" of what promises had been made and what future action will be implemented, but sorry for the slang - all were “BLADY LIES". Mujeebu Rahuman told these lies to hoodwink the poor innocent Muslim Maligawatte and Colombo Central Muslim voters. NOW HE IS TELLING THE SALE "HOODWINKING LIES" ABOUT GOTABAYA RAJAPAKSA BECAUSE MUJEEBU RAHUMAN KNOWS FROM YAHAPALANA POLITICAL SITUATION ANALYSIS THAT THE MUSLIMS HAVE TURNED TOWARDS GOTABAYA RAJAPAKSA AND WILL BE VOTING HIM, Insha Allah. 30% OF THE MUSLIM VOTES WILL BE POLLED BY GOTABAYA RAJAPAKSA, Insha Allah.
Noor Nizam. Convener – “The Muslim Voice”.

Post a comment