November 22, 2019

ஜனாதிபதி கோத்தாபயவிற்கு, விளாடிமிர் புட்டின் வாழ்த்து

நாட்டின் 7 வது நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான “இருதரப்பு உரையாடல்” மற்றும் “ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு” பலப்படுத்தப்படும் என்று புடின் தனது செய்தியில் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் என கூறியுள்ளார்.

"நான் நீங்கள் ஒவ்வொரு வெற்றிகளையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் பெற வாழ்த்துகிறேன்." என வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment