Header Ads



சாய்ந்தமருதுவில் அமைதியான தேர்தல் - மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்ட 19 வாக்குச் சவடிகளில் 19759 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. வாக்குப்பதிவு காலையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மதியம் வரை வாக்களிப்பு மந்தகெதியில் காணப்பட்டது. பின்னர் பிற்பகல் வேலையில் வாக்களிப்பு விகிதாசாரம் அதிகரித்தது.

மக்கள் சுமுகமாக வாக்களிப்பதற்;காக பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட இராணுவத்தினர் ஈடுபட்டனர். தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன.

சாய்ந்தமருது பிரதேசத்தில் தேர்தல் வன்முறைகள் எதுவுமின்றி மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் 76.76 வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் வன்முறைகளற்ற, அமைதியான முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாதுகாப்பு படையினர், தேர்தல் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நன்றிகளை பிரதேச செயலாளர் றிகாஸ் தெரிவித்துள்ளார்.

(றியாத் ஏ. மஜீத்)

No comments

Powered by Blogger.