Header Ads



இளைஞர், யுவதிகளுக்கு சந்திரிக்காவின் அழைப்பு

நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் அரசியலில் ஈடுபட முன் வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியலிலிருந்து 70 முதல் 80 வயதானவர்கள் ஓய்வு பெற வேண்டும். இளைஞர், யுவதிகள் அரசியிலில் ஈடுபட்டால் அவர்களுக்கு உறுதுணையான ஆதரவினை வழங்கி ஒத்துழைப்பு வழங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாக அழிக்கும் நடவடிக்கையில் பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியாக முறையில் செயற்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து வருடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனநாயக செயற்பாடு சிறப்பான முறையில் உள்ளதாக சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர கட்சியை அழிக்க நினைக்கும் தரப்பினருக்கு வாக்கு அளிப்பதா இல்லையா என்பதை மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

இளைஞர், யுவதிகள் வந்தால், நான் கம்பு ஊன்றியேனும் வந்து உதவி செய்வேன். கொள்ளையடித்து மோசடி செய்யாமல் உழைப்பதற்கு எதிர்பார்க்கும் நன்கு படித்த இளைஞர்கள், யுவதிகளை நாம் அரசியலுக்கு கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு வந்தால் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவி செய்ய தயாராக இருகின்றேன். அவ்வாறான இளைஞர்கள், யுவதிகள் தயாராக இருங்கள் என நான் கோரிக்கை விடுப்பதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

70 - 80 வயதுடையவர்கள் ஓய்வு பெற வேண்டும். இம்முறை மக்கள் சிந்தித்து தீர்மானிப்பார்கள். தற்போது ஐக்கிய தேசிய கட்சி முன்பை விடவும் ஜனநாயகமாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.