Header Ads



நாளை மீண்டும் மக்களுடன் இணைவேன், இறுதியுரையில் மைத்திரி தெரிவித்த முக்கிய விடயங்கள்

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேனென்று நான் கூறினேன்.நான் ஜனாதிபதிக்குரிய கூடுதல் அதிகாரங்களைநீக்கினேன். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தேன். பதவிக்காலத்தில் ஒரு வருடத்தை குறைத்துக் கொண்டேன். அரசியலமைப்பை திருத்தி பதவிக்காலத்தை நீடிக்க பலர் முயற்சிகளை எடுத்தாலும் நான் அப்படி செய்யவில்லை. உச்சபட்ச ஊடக சுதந்திரத்தை நான் வழங்கினேன். அதனை பயன்படுத்தி நானே குறிப்பாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் அவற்றால் சளைக்கவில்லை. அரசியல் பழிவாங்கல் , அரச அதிகாரத்தை பயன்படுத்தி கொலை செய்தல், சொத்துக்களை சேதப்படுத்தல் , துப்பாக்கி யார் மீதும் நீட்டி அரச அதிகாரத்தை பயன்படுத்தி எதனையும் செய்யவில்லை. ஆனால் கொள்கை ரீதியாக அரசுக்குள் முரண்பாடுகள் இருந்தன. அதனால் மக்களுக்கான வேலைகளை செய்யமுடியாமல் போனது.

ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்கியதால் பலர் அதில் மறைமுக நன்மைகளை அடைந்தனர். வெளிநாட்டு தலையீடுகள் – போர்க் குற்றம் தொடர்பான பல குற்றச்சாட்டுக்களை 99 வீதம் நான் எனது காலத்தில் நீக்கினேன். அவற்றை விசாரிக்க நீதிமன்றம் அமைத்தல் போன்ற நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலான விடயங்களை நான் கட்டுப்படுத்தினேன்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்தேன்.மத்திய வங்கி மோசடி குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்தேன். அந்த விசாரணைகள் இன்னும் நடக்கின்றன.புதிய அரசு அந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய ஜனாதிபதி ஊழல் பேர்வழிகள் அற்ற அமைச்சரவையை அமைப்பதே அவர் எதிர்நோக்கும் புதிய சவால். வரலாறில் தேர்தலொன்றில் நடுநிலை வகித்த ஜனாதிபதியாக நான் இருந்தமை காரணமாகவே அமைதியான தேர்தல் ஒன்றை நடத்த முடிந்தது. அரச வளங்களை தேர்தலுக்கு பயன்படுத்தவில்லை.

நான் வழங்கிய ஊடக சுதந்திரத்தை தொடர்ந்து வழங்க புதிய ஜனாதிபதி இடமளிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு நான் பல முக்கிய பணிகளை ஆற்றினேன். காணி விடுவிப்பு உட்பட பல விடயங்களை செய்தேன். நூற்றுக்கு நூறு வீதம் என்னால் செய்யமுடியாவிட்டாலும் இயன்றவற்றை செய்தேன்.

ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். அதில் இறந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள். எனது பதவிக்காலத்தில் நான் இயன்றவரை இயன்றவற்றை செய்துள்ளேன். நாட்டுக்கான பணியை முன்னெடுக்க நான் மக்களுடன் நாளைய தினம் மீண்டும் இணைவேன்..”

– ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய இறுதி உரையில் தெரிவிப்பு . tamilam

1 comment:

  1. பதவி கிடைத்த போது வாக்களித்த மக்களையே கண்டுகொள்ளாத ............... இனி சேர்ந்து என்ன பிரயோசனம் ,மக்களுக்கு ,,,,,, செல்லாக்காசை யாரும் விரும்புவதில்லை

    ReplyDelete

Powered by Blogger.