Header Ads



அமெரிக்கவினால் இந்நாடு தீயில், எரிவதை யாராளும் தடுக்க முடியாது

அமெரிக்க மிலேனியம் சலேன்ஜ் நிறுவனத்துடன் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், நாட்டில் இரத்த ஆறு ஓடுவதையும், தீயில் எரிவதையும் யாராளும் தடுக்க முடியாமல் போகும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எச்சரித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்க மிலேனியம் சலேன்ஜ் நிறுவனத்துடன் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், இலங்கை உலக அதிகாரப் போட்டியின் மையமாக மாற்றப்பட்டு, இந்நாட்டில் இரத்த ஆறு ஓடுவதையும், தீயில் எரிவதையும் யாராளும் தடுக்க முடியாமல் போகும்.

இலங்கையிலுள்ள காணி உரிமையை அமெரிக்காவுக்கு கொள்ளையடிப்பதற்கு வழியமைக்கும் இந்த ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதனை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இந்த ஒப்பந்தத்தினால் 480 மில்லியன் டொலர் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கின்றது தானே. இதனைச் செய்வதில் என்ன தவறு இருக்கின்றது என பிரதமர் வினவி வருகின்றார்.

தனது தாய்க்கு விலைபேசினால், அவளை விற்பனை செய்ய யாராவது தயாராகுவார்களா? என நாம் அவர்களிடம் வினவுகின்றோம். எமது இலங்கைத் தாய்க்கு விலை பேச நாம் தயாரில்லை என பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்த விமல் மற்றும் அதுரலிய ரதன தேரர், உதய கம்மன்பில ஆகியோர் அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை நிறுத்துமாறு உத்தரவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. இவருக்கு வேர வேலயே இல்ல.இவர்கள் படித்தது அமெரிக்கா நட்பு நாட்டில்,இவரின் கூட்டணியில் அதிகமானோர் அமெரிக்க குடிமக்கள்,இவர்களின் பிள்ளைகள் படிப்பது மேர்கத்தேய நாடுகளில்.ஆனால் பொது மக்களை முட்டாள்கலாக நினைத்துக் கொண்டு எந்த நேரமும் அமெரிக்காவையும்,சிறுபான்மையினரையும் விட்டால் வேறு பேச்சே கிடையாது.

    ReplyDelete
  2. Unga KKUTTAM WANTHALUM RETTHA AARU ODUMDA .RAJA

    ReplyDelete
  3. Unga KKUTTAM WANTHALUM RETTHA AARU ODUMDA .RAJA

    ReplyDelete
  4. who cares?
    SL needs USA’s strong involvement for better future

    ReplyDelete
  5. இவருக்கு எத்தனை முகங்கள் தெரியுமா? ஒவ்வொன்றும் கொடூரமானவை. குண்டு வெடிப்பின் போது ஒன்று. பின்னர் இன்னொன்று. இப்போது மற்றுமொன்று.

    ReplyDelete
  6. Etkanawe iwanda waay neelam...oppo innum neelam...iwanuhal mattumthaan srilankan....pannada

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. உன்னாலேயும் உங்கூட்டத்தாலேயும் இங்கு எரிக்கின்ற தீயைக் கூட எங்களால் தடுக்க/தாங்க முடியவில்லை சொங்கி. என்ன செய்ய!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.