Header Ads



விமானத்தில் பறக்க தனித்தனியாக பதிவுசெய்தும், ஒன்றாக பயணித்த முஸ்லிம் தலைவர்கள்


– மப்றூக் –

அரசியலில் பிரிந்து நின்று வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, ஒருபயணம் சேர்த்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே இங்கு காண்கிறீர்கள்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் உள்ளுர் பயணிகள் விமானத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை பயணித்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணிப்பதற்கு இவர்கள் மூவரும் தனித்தனியாக பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வாழைச்சேனையில் நடைபெறும் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக றிசாட் பதியுதீனும், அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக ரஊப் ஹக்கீமும், தனது சொந்த ஊர் அக்கரைப்பற்றுக்குச் செல்வதற்காக அதாஉல்லாவும் இந்த விமானத்தில் பயணித்திருந்தனர்.

இந்தப் பயணத்தின் போது, அரசியல் வைரிகளான மு.கா. தலைவர் ஹக்கீமும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவும் கைகுலுக்கிக் கொண்டமை பலரையும் கவர்ந்தது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், எப்பொழுதும் ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவைப் பேணி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் எதிர் எதிர் திசைகளில் இவர்கள் பயணித்தாலும் ஒரு பயணத்தின் மூலம் இவர்களைச் சேர்த்து வைத்ததன் மூலம், தனது வலிமையை ‘காலம்’ இன்னுமொரு முறையும் நிரூபித்திருக்கிறது.



9 comments:

  1. கோமாளிகள்

    ReplyDelete
  2. மிக அவசியமான பதிவு.

    ReplyDelete
  3. எங்களின் துஆ வீண்போகவில்லை

    ReplyDelete
  4. Ajan நீ தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்காதே

    ReplyDelete
  5. Ajan adei kirukka kilattu Tamil arasiyalvaadhigalai vida ivargal periya komaligal kidaiyaadhu. Kidaikadha eelathai vaithu arasiyal seiyum pandrigal neengal

    ReplyDelete
  6. @Rizard, எனது வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களை பற்றி கருத்துசொல்ல எனக்கு உரிமையுள்ளது

    ReplyDelete
  7. YOU MUSLIM LEADERS MUST NOT PUT ALL EGGS IN ONE BASKET WHEN TRAVELLING BY AIR.ANY WAY HAKEEM AND RISHARD ARE LUCKY SINCE THEY ARE TRAVELLING WITH ATHHULLA AS THEIR BODY GUARD.

    ReplyDelete
  8. அரசியலுக்காக ஒன்றாக இருப்பார்கள்;
    நமது உரிமைகளுக்காகத் தள்ளி இருப்பார்கள்!
    இவர்கள்தான் இப்போதும் ஒரிஜினல் ஹீரோக்கள்;
    நாங்களோ எப்போதும் டுப்ளிகேட்டுக்கள்!

    ReplyDelete

Powered by Blogger.