Header Ads



இன பாகுபாடின்றி கோட்டபய, நாட்டை ஆட்சி செய்யக்கூடியவர் - பசில்


கொழும்பில் பெரோசா முஸம்மில் தலைமையில் இயங்கிய ஐ.தே.க பெண்கள் குழு, காந்தா சவிய, இலங்கை பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு முழு ஆதரவையும் அளிப்போம் என உறுதியளித்தனர் என  இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) முன்னிலையில் கொழும்பு பொது நூலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

காந்தா சவிய என்பது அனைத்து மதங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு ஆகும், இது கொழும்பு மற்றும் தலைநகரின் பிற பகுதிகளில் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஒரு அமைப்பாகும்.

கோட்டபய ராஜபக்க்ஷவுக்கு ஒற்றுமையைக் காட்ட பெண்கள் நூற்றுக்கணக்கானோர் இங்கே கூடினர்,  பெரோசா முஸம்மில் தலைமையிலான சிவப்பு (மெரூன்) நிற ஆடை  அணிந்திருந்த ஒரு பெரிய குழு பெண்கள், வரவிருக்கும் தேர்தலில் கோட்டபய ராஜபக்க்ஷவின் வெற்றிக்காக பசில் ராஜபக்ஷ முன் தங்கள்  ஒத்துழைப்பை தெரிவித்தனர்.

மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ஜனாதிபதியின் சட்டதரணிகள் அலி சப்ரி, விஜெயதாச ராஜபக்க்ஷ அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுசில் பிரேம்ஜயந்த், பைசர் முஸ்தப்பா மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தனது தொடக்க உரையில், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், கொழும்பு மேயராக இருந்த காலத்தில், ஒரு முஸ்லீமாக, ஐக்கிய தேசியக் கட்சியை (யு.என்.பி) பிரதிநிதித்துவப்படுத்தியபோது, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்க்ஷ அவருடன் கைகோர்த்து கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்ய உதவினார் என்றும் மேலும் சமுதாயத்தின் தேவைகளைப் புரிந்து கொள்ளக்கூடியவரும், மக்களை திருப்திப்படுத்தும் வகையில் தேசத்திற்கு சேவை செய்யக்கூடிய ஒரு பக்கச்சார்பற்ற ஜனாதிபதியாக இருப்பார்.  ஆகவே நாம் அவரை நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்களின் உறுதிமொழிக்கு பதிலளித்த பசில் ராஜபக்க்ஷ, இலங்கை ஜனாதிபதி பதவிக்கு கோட்டபய ராஜபக்க்ஷ சிறந்த தேர்வாக இருப்பார், ஏனெனில் அவர் எந்த அரசியல் அல்லது இன பாகுபாடும் இன்றி நாட்டை ஆட்சி செய்யக்கூடிய நபர். ஜதே.க ஆட்சியின் கீழ் கொழும்பு பெண்களின் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்தன, 1,500 க்கும் மேற்பட்ட குடிசை இடங்கள் உள்ளன, அங்கு பெண்கள் பரிதாபகரமான நிலையில் வாழ்கின்றனர். "அவர்கள் கடன்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம், மோசமாக பராமரிக்கப்படும் வடிகால் அமைப்புகள் போன்றவற்றால் பாரியநெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்," என்று அவர் கூறினார், கோட்டபய ஜனாதிபதியாக வரும்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்றும் உறுதியளித்தார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா இந்த பிரச்சினைகளை  தீர்க்காமல் கண்மூடித்தனமாக இருந்தார் என குற்றம் சாட்டினார். மேலும் ராஜபக்க்ஷ, அவர்கள் இந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக பிரச்சினைகளால் ஏழைக் குடும்பங்கள் தொடர்ந்து அவதிப்படுவதாக புலம்பினார்.

பெரோசா முஸம்மில் அவர்கள் செய்தித் தொடர்பாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஐ.தே.க ஆட்சியின் கீழ் நகரத்தில் உள்ள ஏழைப் பெண்கள் நிறைய அவதிப்பட்டனர், இப்போது அவர்கள் “போதும் போதும்’ என்று சொல்ல ஒரு எல்லைக்கு வந்துவிட்டார்கள்” என்று கூறினார். "எந்தவொரு மத, இன, பாலின பாகுபாடும் இன்றி சமூகத்திற்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் கோட்டபய ராஜபக்க்ஷ மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, எனவே, அனைத்து பெண்களும் கோட்டபயாவின் வேட்புமனுவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று  கூறினார்.

3 comments:

  1. ade musaamil wife a veettukkul vekka teriyada vekkam kettavane, onakku JAIC HILTON la room book panni nai(DOG) race vilayada time irukki, sorana ketta nai star dust,bellys casino,jims poker room,bellagi colombo iduku povaye onakku time sari FEROZA meyura ellam edatkum, ne colombo mayora irundu maligha watha muslim mayya vadi kanikku senjadu sri lanka muslim marandalum colombo muslim marakka matargal.

    ReplyDelete
  2. Yes...y not...enna poyyaccholli enna nadakka....gread

    ReplyDelete
  3. Muzammil ???? Deal master, he would do anything to get money for playing casino.he had joined all the parties in his useless career except ulema party.he would join that also.on 17th he would be kicked out and that would be the end of his political career.he is playing for the money he received from basil.he is an empty shell.girst if not for UNP.

    ReplyDelete

Powered by Blogger.