Header Ads



பதவி வில­குகிறார், மஹிந்த தேசப்­பி­ரிய

ஜனா­தி­பதி தேர்தல் முடிந்­த­வுடன்  பதவி வில­கப்­போ­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், 

ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் மற்­றொரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு நான் தலைமை தாங்­கப்­போ­வ­தில்லை என்ற முடிவை இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னரே எடுத்­துள்ளேன்.

எனது பதவி விலகல் கடி­தத்தில் கையொப்­ப­மிட்டு, அது தற்­போது மேசையில் தயா­ரா­க­வுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­தவே முனைப்­புக்­காட்­டப்­பட்­டது. அது சாத்­தி­யப்­ப­டாது போனால் பதவி விலகத் தீர்­மா­னித்­தி­ருந்தேன். ஆனால்,  ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த வேண்­டிய நிலை ஏற்பட்டதால், இதனை நடத்திவிட்டு பதவி விலகத் தீர்மானித்துள்ளேன்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்தத் திட்­ட­மிட்­டி­ருக்கும் நிலையில் கூட சில அர­சியல் தரப்­புகள், மாகாண சபைத் தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வரு­கின்­றன. இந்த விட­யத்தில் என்னால் உடன்­பட முடி­யா­தி­ருப்­ப­துடன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்திக் கொள்­வதை விட பதவி வில­கு­வ­தையே விரும்­பு­கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. நல்ல முடிவன்று

    ReplyDelete
  2. We kindly make this humble request on behalf of the nation of this country to help all of us to accomplish all the elections either provincial or general elections as we strongly feel your absence will definitely accommodate evil forces to attain their personal gains at the mercy of the countrymen which is not acceptable at any cost.

    ReplyDelete
  3. திரு மஹிந்த தேசப்பிரிய அவர்களே ஒரு சிறந்த தேர்தல் ஆணையாளராகவே உம்மை கருதுகிறோம் இந்நாட்டு மக்கள்.
    எந்த ஒரு அரசியல் கட்சியின் பக்கமும் சாராது பாரபட்சமின்றி தேர்தல் சம்பந்தமாக நீங்கள் எடுத்த தீர்மானங்களும் அதிரடி நடவடிக்கைகளும் வரவேட்க்கத்தக்கது. நாங்கள் உற்று நோக்கி கொண்டிருக்கின்றோம்.
    சமீபத்தில் ஒரு சில ஆளுநர்களுக்கு எதிராக உமது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்கவில்லை என்ற வேதனையின் வெளிப்பாடுதான் நீங்கள் இப்போ எடுத்த முடிவாகும்.- அராஜகமும் போக்கிரித்தனமும் கொண்ட அரசியல் இனவாதிகளை வீட்டுக்கு அனுப்ப உங்கள் பங்களிப்பு அவசியமல்லவா. இப்படி நடுவில் விட்டுப்போனால் என்னாவது?- மர்சூக் மன்சூர் -தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.