Header Ads



அதாவுல்லா விடுத்துள்ள அறிக்கை

சில ஊடகவியலாளர்களின் ஒரு தலைப்பட்சமான சிந்தனைகள் மாற்று அணிகளிலுள்ள அரசியல்வாதிகளின் கருத்துக்களை மழுங்கடித்து சமூகங்களுக்கான உண்மையான தீர்வுகளை மறைப்பதற்கு வழிகோலுகின்றது என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தான் சொல்ல விளைந்த கருத்துக்களை திசை திருப்பும் வகையில் ஊடகவிலாளர் நடந்து கொண்ட சம்பவம் பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

மலையகச் சமூகத்தின் ஒப்பற்ற உழைப்பினாலே எமது நாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கிறது.இவ்வுன்னத உழைப்பாளிகளின் வாழ்வாதார சவால்கள் உரிய தீர்வின்றி காலங்கடத்தப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது அவா.

நாட்டின் மொத்த வருமானத்துக்கே வளம் சேர்க்கும் இம்மக்களின் உழைப்புக்கான ஊதியமாக ஐம்பது ரூபாவை அதிகரித்தல்,பறிக்கப்படும் கொழுந்துகளின் கிலோவை வைத்துக் கணக்குப்பார்த்தல் அல்லது வேலை செய்யும் நேரம் என்றில்லாமல் நிரந்தர வருமானத்துக்கு வழி காணப்படல் அவசியம். இவர்களுக்கென தனியான காணித்துண்டுகளை சொந்தமாக வழங்கி, விவசாயம், கிராமியப் பயிர்ச் செய்கைகளை ஊக்குவிக்க முடியும். தோட்ட முதலாளிமார்களின் தீர்மானம் இம்மக்களின் வருமானத்தை தீர்மானிப்பதை மாற்றியமைக்க இதுவே சிறந்த வழி.

ஆனால் நான்கரை வருடங்கள் ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த மக்களுக்கு எதையும் செய்யாது காலம் கடத்திவிட்டது.சில அரசியல் தலைமைகள் தமது சொந்த இலாபங்களுக்காக சிறுபான்மை சமூகங்களை தவறாக வழிநடத்தும் காலம் மலையேறவேண்டும். 

இத்தவறான வழிகாட்டல்களால் எமது சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகம் மத்தியில் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையையே ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் தலைவர் என போற்றப்பட் அமரர் சௌமியமூர்தி தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு  பிரஜாவுரிமையையே பெற்றுக் கொடுத்தார். அதைபோன்றே சுயதொழில் செய்வதற்காக அம்மக்களுக்கு காணிகள் உரித்தாக்கப்பட வேண்டும் என்கிறேன். 

இதைவிடுத்து, மலையக மக்களின் தலைவரெனத் தங்களைத் தாங்களே முடிசூடும் சில தலைவர்கள்,ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் பிரச்சினையை சில்லறைப் பிரச்சினையாக்குவதறக்கு இடமளிக்கக் கூடாது. 

சில ஊடகவியலாளர்களின் ஒரு தலைப்பட்சமான சிந்தனைகள் மாற்று அணிகளிலுள்ள அரசியல்வாதிகளின் கருத்துக்களை மழுங்கடித்து சமூகங்களுக்கான உண்மையான தீர்வுகளை மறைப்பதற்கு வழிகோலுகின்றது. 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மலைய மக்கள் தொடர்பாக நான் சொல்லவிளைந்த கருத்துக்களை திசை திருப்பும் வகையில் அந்த நிறுவனத்தின் ஊடகவிலாளர் நடந்துகொண்டவிதம் வருத்தமளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.

8 comments:

  1. KINDLY READ THIS TOO - Insha Allah.
    Hon. Mr. M. A. Sumanthiran MP and Spokesperson TNA.

    Your statement that Former Minister Athaullah should tender an appology to the Up-country Tamils and all the Tamil people is meaningless.
    The "triggering" word was - "Thottakkaaralgal" mentioned by Former Minister A.L.M Athaullah during the interaction at the show. But "The Muslim Voice" wishes to tell you that the Sinhalese people call (both) the Sinhalese and Tamil people living and working in the estates in the up-country and in the South, "WATHUKARA JANATHAWA". The tamil translation which is "Thottakkaaralgal". Therefore your statement that Former Minister Athaullah should tender an appology to the Up-country Tamils and all the Tamil people is meaningless. Let us go back to reality Mr. Sumandiran.
    The first major instance of exclusion was perpetrated against Indian Tamils, also called Hill Country Tamils, Up-Country Tamils or Estate Tamils, since most continued to work on tea plantations, as did their ancestors who came to the country as indentured labourers beginning in the 1830s. The community was denied citizenship within a year of independence spearheaded by the Ceylon Tamil politicians. In an island replete with crosscutting cleavages, caste-conscious Sri Lankan Tamils supported this disenfranchisement, as did local and British businessmen (including tea estate owners) who feared these Tamil labourers, who had voted overwhelmingly against the pro-West and pro–trade UNP in the 1947 general election, would be easily manipulated by the country’s leftist parties. Yet, the UNP representatives’ demands when negotiating with the Indian government regarding the plight of Estate Tamils made clear the extent to which Sinhalese Buddhist ethnocentrism was motivating the island’s position towards minorities, in this instance against longstanding residents who had contributed much to the economy. When the Up-country Tamils were oppressed by your own Ceylon Tamils then, how come you claim NOW that they your (kith and Kin).
    Mr. Sumanthiran, you are doing this for cheap political publicity and gain thinking that the Up-country Tamils will join the TNA to fight the new Gotabaya/Mahinda government. You are hpoefully trying to "POLARIZE" the Tamil votes towrdsa the TNA. NO, the Up-country Tamils like the Muslim Vote Bank have begun to act on their own and will not be willing to me misguided by "OPPORTUNISTIC" tamil/muslim politicians.
    Therefore, there is NO need for an appology by Former Minister A.L.M.Attaullah.
    Once again "The Muslim Voice" feels that it was not an appropriate word to be used and on behalf of Former Minister Atthaullah, "The Muslim Voice" wishes to tender it's appologies to the Up-country Tamils.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. சம்பந்தப்பட்ட மேற்படி விடயத்தில் சரி பிழை காண்பதனை விடுத்து சக்தி இதுவரையும் முஸ்லிம் சமூகத்திற்கு இன்றைய நாள்வரை செய்தது என்ன என எண்ணிப் பார்க்குமபோது இறுதியில் இஸ்லாமிய வாசகர்களுக்கு முழு ஏமாற்றத்தையே தருகின்றது வழமையாகிவிட்து. முஸ்லிம் சமூகத்தை பொது வெளியில் வைத்து அவமானப்டுததுவது உட்பட இச் சமூகத்திற்கு அவரகளால் செய்யக்கூடிய உச்ச கட்ட அவமானத்தை செய்வது வழக்கமாகிய ஒன்றாகும். சக்தி தரும் மிட்டாய்காகவும் நாறிப்போன கொத்து ரொட்டிற்காகவும் எமது தலைமைகள் அங்கு சென்று அவமானப்பட்டுத் திரும்புது வழக்கமாகிவிட்டது. இந்தப் பேட்டி முஸ்லிம் தலைமைகளை வேண்டுமென்றே முஸ்லிம் தலைமைகளை அவமானப்டுததுவதற்காவே திட்டமிடடு நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வினைப் ஊன்றிப் பார்த்தோருக்கு இச்சதியின் பின்னணி நன்கு புரிந்திருக்க வாய்ப்புணடு. சக்தியின் ஊடகவியலாளரின் சதியின் பின்னணியின் காரணமாவே குறித்தகோலாட்டம் நடைபெற்றுள்து என்பது நன்கு புலப்படுகின்து. இனிவரும் காலங்களில் எந்த முஸ்லிம் தலைமைகளும்; சக்தியின் நாய்வாலாட்டத்திற்கு மதிப்புக் கொடுத்-து எங்களைப் போன்றவர்களையும் சிறுவர்களாக்க முனையவேண்டாம் என மிகத் தெளிவாகக் கேடடுக் கொள்ள விரும்புகின்றோம்.

    ReplyDelete
  3. நீங்களும் இங்கு திசை திருப்புகிறார்கள். நீங்கள் சொன்ன வார்த்தை மிகவும் கடுமையான கூடாத மலையக மக்களின் மனதைப் புண்படுத்தும் வார்த்தை பிரயோகம்.

    உதாரணத்துக்கு ஒரு சிங்கள அரசியல்வாதி முஸ்லிம்களைப் பற்றிய நல்ல விடயங்களை பேசும் பொழுது அவர் திடீரென தம்பியா என்று சொன்னால், அது முஸ்லிம்களை நிந்தனை செய்யும் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    நீங்கள் உண்மையான நல்ல மனிதனாக இருந்தால் நீங்கள் சொன்ன வார்த்தை பிரயோகத்திற்கு மலையக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.

    ReplyDelete
  4. மீண்டும் சொல்கிரேன் கூட்டிக் கொடுத்து கூத்து பார்க்கும் அந்த மாதிரியான நிகழ்ச்சிகளை தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் புத்தி ஜிவிகல் தவிர்த்து விடுங்கள்

    ReplyDelete
  5. Unakku wantha rettham mattha arasiyal wanthiki wantha takkali chianti.....
    Unakkum kaati thanthikkan Allah iwarhalin soolchihalay bt nee kandu kondaal unnai allah paathuhaappan illay nee silwathuthaan sari enru meendum meendum thappu seywaay enraal unnai kewlappadutthaamal Allah wida maatten....
    Unakku ellarum sinnapullayya....
    Waysula moottha arasiyal methay seyalpaduwathu sinnapulla thanam....so neethan kay bonsai...

    ReplyDelete
  6. Mr.Athaullah you are used word is thottakattan that is really,
    Some fool's thinking that it is wrong word's

    ReplyDelete
  7. Hi Mr Athaullah
    Please a take step back and apologise that's it, very simple. Please keep your prestige aside and show at least you are a good Muslim.
    My dear friends as genuine Muslims please don't try to rectify when you made a mistake.
    silly mistakes, it could happen to anyone and just say sorry and move on.
    I'm expecting he will apologise - after Gotha ”commands” before the general election, you guys wait and see.

    ReplyDelete
  8. its not a big issue Athaullah is kind hearted person he spoken for that community

    ReplyDelete

Powered by Blogger.