Header Ads



'இம்முறை ஜனாதிபதி தேர்தலில், இப்டியும் ஒரு சாதனை நடந்தது'

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் நடைபெற்று முடிந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலிலேயே ஆகக் குறைந்த செல்லுபடியற்ற வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்த காரணத்தினால் வாக்குச் சீட்டு 26 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்ட நிலையில் மக்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. 

எனினும் கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தேர்தலிலேயே ஆகக்குறைந்த செல்லுபடியற்ற வாக்கு வீதம் பதிவாகியுள்ளது. 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 13,387, 951 பேர் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். 

இவர்களின் வெறுமனே 135,252 வாக்குகள் மட்டுமே செல்லுபடியற்ற வாக்குகளாக பதிவாகியது. 

வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் நோக்குகையில் இது வெறுமனே 0.85 வீதமாகும். 

No comments

Powered by Blogger.