November 07, 2019

ராஜபக்சவினர்தான் அளுத்கம தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரம் உள்ளது - அசாத் சாலி

ராஜபக்சவினர்தான் அளுத்கம தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரம் உள்ளது என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லீம் காங்கிரசின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சஜித் ஒவ்வொரு கூட்டத்திலும் வித்தியாசமான சிந்தனைகளுடனும், கருத்துக்களுடனும் பேசி வருகின்றார். ஆனால், கோத்தபாய எழுதிக் கொடுத்ததைக் கூட வாசிக்க தெரியாதவர், அவர் ஜனாதிபதியானால் நாட்டின் நிலை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள்.

ராஜபக்ச குடும்பத்தினர் அளுத்கம தாக்குதலை மேற்கொண்டது எனக்கு தெரியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

கோத்தபாயவிற்கு ஆதரவு கோரி பிரசாரம் செய்பவர்கள் யார் என்று பார்த்தால், ஹிஸ்புல்லா அவர் ஒரு குள்ள நரி, இது ஒரு பௌத்த நாடு என்ற நலிந்த சில்வா, அவருக்கு பக்கத்தில் ஈழக்கொடி பிடித்த வரதராஜ பெருமாள் அமர்ந்திருக்கிறார், தலதா மாளிகை மீது தாக்குதல் மேற்கொண்ட கருணா, பிள்ளையான், அலி சபரி, ரதன தேரர் போன்றவர்களே.

ஹிஸ்புல்லா குள்ள நரி ஒவ்வொரு ஒப்பந்தங்களுக்கும் ஏற்ப ராஜபக்சவினருக்கு வேலை செய்கிறார். எவன் கார்ட் விவகாரம், தாஜூடீன் கொலை வழக்குகள் முடிந்து விடவில்லை என்பதை அவர்கள் நினைவில் வைக்கட்டும்.

கிறீஸ் மனிதர்களை உருவாக்கியவர்கள் யாரென்று எல்லோருக்கும் தெரியும். கிறீஸ் மனிதர்களை துரத்தும் போது அவர்கள் இராணுவ முகாமிற்கும், பொலிஸ் நிலையத்திற்கும் ஓடியதிலிருந்தே இது புரிந்திருக்கும்.

சரத் சில்வா போன்றோரை உருவாக்கி அவர்கள் தமக்குரியவற்றை செய்துகொண்டார்கள். ஆனால், அவர்கள் அவருக்கு செய்தது என்ன என்பதை அவர் பகிரங்கமாக சுனாமி நிவாரணத்தை ராஜபக்சவினர் தம் குடும்ப அபிவிருத்திக்கு பயன்படுத்தினார்கள் என்ற உண்மையை சொல்லும் போதிருந்தே அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ராஜபக்ஸர்கள் அவர்களுக்கு உதவி செய்யவே இன்னொரு ராஜபக்சவை உருவாக்கினார்கள் அவர்தான் விஜேதாச ராஜபக்ச. மஹிந்தவோ, கோத்தபாயவோ, மைத்திரியோ, ரணிலோ, சஜித்தோ யாராக இருந்தாலும் முஸ்லிம்களுடன் மோத வேண்டாம்.

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்காகவும், உரிமைகளை மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். அதற்கான உரிமையை சஜித் பிரேமதாச தந்துள்ளதாலேயே அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு ஆதரவளிக்கின்றோம், என்று தெரிவித்தார்.

2 கருத்துரைகள்:

உண்மையான பேச்சு

Azad Sally was a Member of the Central Provincial Council till he resigned in March 2016. He was a UNP CPC member. When Azad Sally contested the Municipal Elections Azad Sally received only about 385 votes. Azad Sally was an utter failure at that elections. Azad Sally has been a loud mouthed Muslim Politician who was very corrupt during the time when he made political allegiance with the Mahinda Rajapaksa government (Haj quota scandals). One of Azad Sally's political deceptions is to make "big noises" on issues concerning the Muslim community, but nothing happens at the end, other than the Muslim community being pushed into social and political turmoil and disaster. Azad Sally was attached to the President's Office as an Advisor with perks earlier and then was appointed as the Governor of WPC by MY3. It is rumoured that his brother Ryaz Sally, appointed to a high post by the Minister of Industries and Commerce Minister Rishad Bathiudeen has had very close connections with the Bodu Bala Sena and has revealed quite a lot of vital information of Muslim business persons, Travel Agents, Haj Group Operators and provided information about the financial status of the Muslim Community, which have become detrimental to our community in recent time, it is alleged. The BBS has acknowledged this fact publicly in the media. A New Political Culture has to be born from within the Muslim Community, especially from among the Youth that should "politically" reprimand these deceptive, dishonest and unscrupulous Muslim politician in any of the forthcoming elections, Insha Allah .These hypocritical politicians should be got rid of from our innocent community soon, Insha Allah. A dedicated former government, honest and disciplined administrator and a “PATRIOT”, Gotabaya Rajapaksa cannot be harmed by a “THIEF” and a “POLITICAL CHAMELEON” like Azad Sally who has begun to make big noises in the Eastern Province on ACMC platforms, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener – “The Muslim Voice”.

Post a comment