Header Ads



ஒரு சின்னத்திற்கு ஒரு, புள்ளடி மட்டும் போதுமானதா..?

(கலாபூசணம் ஜே.எம். ஹாபீஸ்)  

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வாக்களிப்பது  என்று பலர் எண்ணிடம் விளக்கம் கேட்டனர்.  இன்னும் ஒரு சிலர் தாம் வாக்களிக்கும் முறையை  தவறானவித்தில்  குறிப்பிட்டதையும் அவதானிக்க முடிந்தது. எனவே அது பற்றிய சுருக்கமான குறிப்பை எழுதுவது நல்லது எனக் கருதுகிறேன். 

வழமைக்கு மாறாக இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 2ம், 3ம் வாக்கு தெரிவு பற்றி சிலர் அலட்டிக்கொள்வதும் இதற்கு ஒருகாரணம்.  பொதுவான பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் மூவருக்கு புள்ளடி இட்டு; பழக்கப்பட்ட விடயங்களும் மற்றொரு காரணம். மேலும் ஒரு சில குறுகிய நோக்கம் கொண்டவர்கள் தமது ஆதரவாளருக்கு கிடைக்காத வாக்கை சிதறடிக்க அல்லது ரத்தாகும் விதத்தில் இவ்வாறு குழப்பி அடிப்பதும் உண்டு. 

எனவே வாக்களர்கள் மிக எளிய முறையில் இதனை விளங்கிக் கொண்டால்; போதுமானது. அதாவது ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவார். ஏனைய தேர்தல்கள் போன்று பலர் தெரிவாக மாட்டார்கள். எனவே ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே உண்டு. அதனை ஒருவருக்கு அடையாளப்படுத்தினால் போதுமானது. அதிலும் முதலாவது அல்லது இரண்டாவது நிலைக்கு வாக்குகள் பெறுபவர்களது வாக்குச் சீட்டில் 2ம் இலக்க அடையானம் கணக்கெடுக்கப்படுவதில்லை. (50 சதவீத்ததை தாண்டாவிட்டாலும்)  

எனவே தற்போதைய கள நிலைமைகளுக்கு ஏற்ப அன்னப் பறவையும், தாமறை மொட்டும் நிச்சயம் முதல் இரண்டு இடங்களைப் பெறும். இவர்களில் ஒருவரே வெற்றி பெறுவது நிச்சயம். எனவே இவை இரண்டுக்கும் வாக்களிக்கும் எவரதும் 2ம் இலக்க அடையாளம் கணக்கில் எடுபடாது (50 சதவீத்ததை தாண்டாவிட்டாலும்). அதாவது 2ம் இலக்கம் எண்ணப்படுவதில்லை. அவ்வாறு 2ம் தெரிவு வழங்குவது பயன் அற்றது.  

இந்த இரண்டு சின்னங்கள் தவிற வேறு ஏதாவது ஒரு சின்னத்திற்கு வாக்களிப்பவர்கள் மட்டுமே 2ம் 3ம் இலக்க அடையாளம் பற்றி சிந்திக்க வேண்டும். எனவே எம்மில் அதிகமானவர்கள் அன்னத்திற்கு அல்லது தாமறை மொட்டுக்கு வாக்களிப்பதால் தாம் விரும்பும் சின்னத்திற்கு அருகில் ஒரு புள்ளடியுடன் நிறுத்திக்கொள்வதே நல்லது என்பது எனது ஆலோசணை. 

கடும் மும்முணைப்போட்டி ஒன்று இருக்குமாயின் மேலே நான் கூறும் ஆலோசனை பொருந்தாது. ஆனால் மேற்குறிப்பிட்ட இரண்டு சின்னங்களையும் வீழ்த்தி அதற்கு மேலால் ஒருவர் வெற்றி ஈட்டும் அளவுக்கு மூன்றாவது ஒரு அபேட்சகர் இந்த தேர்தலில் இல்லை என்ற நிலைப்பாட்டிலே இது சொல்லப்படுகிறது. (அன்னப் பறவை அல்லது தாமறை மொட்டு அல்லாத ஒன்றுக்கு வாக்களிக்க விரும்புபவர் 1, 2 இலக்கங்களை அடையாளமிடலாம். அவ்வாறு வாக்களிக்க உள்ளவர்கள் மட்டும் அது பற்றி வேறாக விளக்கம் பெற்றுக் கொள்ளவும். 


1 comment:

  1. இவரது விழக்கம் பச்சப் பிழையான விழக்கம்
    இன்று காலை இடம்பெற்ற விடியல் நிகழ்சியில் பிரதி தேர்தல் ஆணையாளர் அவர்கள் எவ்வாறு வாக்களிப்பது என்று தெளிவு படுத்தியுள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.