Header Ads



அப்பாவி முஸ்லிம்கள் மீது, அடிப்படைவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது - டிலான்

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் அச்சமும், சந்தேகமும் இன்றி வாழ வேண்டுமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று -05- நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் கோத்தபாய ராஜபக்ச மட்டக்களப்புக்கு சென்ற போது, வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு 35 ஆயிரம் தமிழ் மக்கள் அவரது கூட்டத்திற்கு வந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கூட்டத்திற்கு இந்தளவு தொகை தமிழ் மக்கள் வந்ததை வரலாற்றில் எப்போது நாம் பார்த்தோம்.

அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 58 வீதமானவர்கள் தமிழ், கத்தோலிக்க மக்கள். மட்டக்களப்பில் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு தற்போது பிரச்சினை.

கொழும்பில் வாழும் தமிழ் கத்தோலிக்க மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. அவர்களின் உயிர் ஆபத்தில். அவர்களின் வாழ்க்கையில் இழப்பீடு செலுத்த எவரும் இல்லை.

இவர்களை கொலை செய்தவர்கள் சம்பந்தமாக தீர்மானத்தை எடுப்பதற்கு பதிலாக அவர்களை தோளில் சுமந்துள்ளனர். கிராமங்களில் இருக்கும் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது அடிப்படைவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம்களையும் அடிப்படைவாதிகளாக மாற்றியுள்ளனர். இதற்கு பங்களிப்பு செய்த ஹக்கீம் மற்றும் றிசாட் பதியூதீன் ஆகியோர் மாத்திரம் அமைச்சு பதவிகளை காப்பாற்றி கொண்டனர்.

அப்பாவி முஸ்லிம் மக்களுடன் நாம் வேண்டும் என்றே கோபித்து கொண்டோம். தம்மை இந்த நிலைமைக்கு தள்ளியது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் என்ற நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. அடிப்படை முத்திரை குத்திய இனவாத கும்பலுடந்தான் நீங்களும்,மஹிந்தவும் உள்ளீர்கள்.அனைத்தும் தெரிந்தும்,அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு பேசுவது வேடிக்கையாக உள்ளது.

    ReplyDelete
  2. அட.. ஆடு நனைகிறது என்று இங்கே ஓநாய் ஒன்று அழுவதைப் பாருங்களேன்.

    ReplyDelete
  3. நடித்தது போதும்

    ReplyDelete

Powered by Blogger.