Header Ads



முஸ்லிம் பகுதிகளில் சஜித், சூறா­வளி பிர­சா­ர­த்தில் பங்கேற்கிறார்

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் சூறா­வளி பிர­சா­ர­த்தில் ஈடு­ப­ட­வுள்ளார்.  

இன்று வட பகு­திக்கு விஜயம் செய்யும் அவர், நாளைய தினம் கிழக்கில் பல பகு­தி­க­ளிலும் பிர­சா­ரக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்ளார்.

இன்று காலை மன்­னாரில் இடம்­பெறும் பிர­சா­ரக்­கூட்­டத்தில் பங்­கேற்கும் சஜித் பிரே­ம­தாச அத­னை­ய­டுத்து கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார்.

நாளை சனிக்­கி­ழமை அம்­பாறை மாவட்­டத்­திற்கு  சஜித் பிரே­ம­தாச விஜயம் செய்­ய­வுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அட்­டா­ளைச்­சேனை, கல்­முனை மற்றும் பொத்­துவில் ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெ­ற­வுள்ள தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் சஜித் பிரே­ம­தாச கலந்து கொள்­ள­வுள்ளார்.

வடக்கு கிழக்கில் இடம்­பெறும் பிர­சா­ர­கூட்­டங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் மற்றும் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பிர­தேச சபை­களின் தவி­சா­ளர்கள் என பலரும் கலந்து கொள்­ள­வுள்­னனர்.

அட்­டா­ளைச்­சே­னையில் நடை­பெ­ற­வுள்ள பிர­சார பொதுக்­கூட்டம் அஷ்ரப் ஞாப­கார்த்த பொது விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டு­களை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு ( கிட்டுப்பூங்கா ) வில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் மாபெரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் வெற்றிக் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. முஸ்லிம்கள் பாதிக்க்பட்டபோது குறைந்தபட்சம் அவர்களைப் பார்வையிடக்கூடா வராத இவர், எங்கள் மத்தியில் சூறாவளிப் பிரசாரம் செய்கிறார். ஒன்றில், எங்கள் அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை! இல்லாவிட்டால், இவருக்கு வெட்கமில்லை! பாவம் அப்பாவிகள்.

    ReplyDelete

Powered by Blogger.