Header Ads



முஸ்லிம்களே அதிகளவில், சஜித்திற்கு வாக்களித்திருந்தனர் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

அதிகார வெறிபிடித்த வர்க்கத்திடம் இருந்து கிழக்கினை மீட்பதற்கு தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ந்தும் பயணிக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று -19- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

நல்லாட்சியின் மீது கொண்ட வெறுப்புக் காரணமாக கோத்தபாயவுக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கியுள்ள மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பதவி விலகி உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும்.

மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் அரசாங்கமாக இருந்தால் வழிவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும்.

எமது கட்சிக்கு ஓரளவு வாக்கு சரிவு உள்ளது. அதனை எதிர்காலத்தில் சரிசெய்து தொடர்ந்து பயணிக்க எமது கட்சி தயாராகியுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் எமது கட்சி வன்முறையில் ஈடுபடப்போவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால், இந்த தேர்தல் மூலம் யார் வன்முறையாளர்கள், யார் ஜனநாயகவாதிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பாரிய எந்தவித வன்முறைகளும் அற்ற தேர்தலாக நடைபெற்றுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஜனநாயகத்தின் மீதுகொண்ட நம்பிக்கையினை மீண்டும் நிரூபித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் தனது வாக்கு வங்கியை இழந்துள்ளது. முஸ்லிம் மக்களே அதிகளவில் சஜித்திற்கு வாக்களித்திருந்தனர் என கூறியுள்ளார்.

3 comments:

  1. என்னமோ சஜித்துக்கு வாக்களிப்பது இலங்கை அரசியலில் பெரும் குற்றம் போல.

    ReplyDelete
  2. Hi,பிள்ளையார். இருட்டறையில் இருந்து இப்பதான் வெளிய வந்தாக்கும். தேவையென்றால் தண்ணியில் கொஞ்சம்.......

    ReplyDelete
  3. இவரு எப்படி, எப்போ வெளியே வந்தார்?

    ReplyDelete

Powered by Blogger.