Header Ads



மஹிந்தவின் காலத்தில் அளுத்கமவில் மட்டுமே, ஒரு சம்பவம் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தது - அலி சப்ரி

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த சகல காலக்கட்டங்களிலும்  முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் திகன, அளுத்கம, குளியாப்பிட்டிய போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்கள் போன்று  நடக்கலாம் என்ற யூகத்தை வைத்தே 'அம்பானட லெபே' என்ற கதை திரிவு படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

கண்டி, மடவளை பஸார் சிரிமல்வத்தை பகுதியில்  இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதவு தெரிவித்து  இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரிவு இதனை ஒழுங்கு செய்திருந்தது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது-,

தற்போதைய அரசியல் நிலைமையில் நாம் மேலும் முன்னேறிச் செல்வதா அல்லது மீண்டும்பழைய பாதைக்கு 'யூ ட்ரேன்' போடுவதா என்று முடிவெடுக்கும் நிலையில் இருக்கி​ேறாம். கடந்த உள்ளுராட்சி தேர்தல் புள்ளி விபரங்களை எடுத்துக் கொண்டால்  கோட்டாபய ராஜபக்ஷ  போட்டியிடுகின்ற   மொட்டுச்  சின்னத்திற்கு சுமார் 50 இலட்சத்திற்கும் மேல்  வாக்குகள் கிடைத்தன.

ஐ.தே.க. ஆட்சி காலத்தில்   யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. 1983ல் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள், 13 இராணுவ வீரர் கொலையை வைத்து 300 முதல் 400 பேர்வரை மொத்தமாக நாடு முழுவதும் கொல்லப்பட்டார்கள், 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வீடு,  கடைகள் தாக்கப்பட்டன. இவ்வாறு  ஐ.தே.கவின் அடாவடித்தனங்களை  அடுக்கிக்கொண்டே போகலாம். இனியுமா நாம் ஐ.தே.கவுக்கு வாக்களிக்க வேண்டும்.

முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்தவின் காலத்தில் அளுத்கமவில் மட்டுமே ஒரு சம்பவம் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தது. அது பற்றிப் பேசப்பட்ட திலந்த விதானகே இன்று ரவி கருணாநாயக்காவுடன் உள்ளார். எனவே குழப்பவாதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

திறைசேரி காலியாகியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச எப்படி சமுர்த்தியையும், ஜனசவியையும் சேர்த்து இரண்டையும் வழங்க முடியும்? பயங்கரவாதி சஹ்ரானுக்கு எதிராக 97 முறைப்பாடுகள் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காத அரசு எப்படி நல்லாட்சி புரிய முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

5 comments:

  1. சுயநலவாதியே : மற்றைய அசம்பாவங்களெல்லாம் உங்க தலைவர் செய்யலைன்னா நீங்களா செஞ்சீங்க. அநீதிளைக்கப்பட்டவர்களின் Bபதுவா க்கு ஆளாகாதீர். பாதிக்கப்பட்ட நம் சமூகம் இன்றும் அழுதுகொண்டிருக்கிறது....
    மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete
  2. not having common scene......educated muslim fallen in to the rubbish

    ReplyDelete
  3. ஆம் உண்மை.ஆனால் கடந்த நாலு வருட நல்லாட்சியில் அதிகம் இனவாத நடவடிக்கையை நடத்தியவர்கள்,பேசியவர்கள் தற்போது கும்பலாக மஹிந்தவையும்,கோத்தாவையும் சூழ உள்ளனர்.உண்ணாவிரதம் முதல் இனவாத பேச்சுக்கள்,வன்முறை செய்யும் போது தலைமைத்துவம் வழங்கிய அனைவரும் அங்கேதான் இறுதியில் இணைந்து விட்டனர்.அவர்கள் யார் என உங்களுக்கும் தெரியும்.இது எல்லாம் தெரிந்துமா இன்னும் உங்களின் பேச்சு தொடர்கிறது.முதலில் இனவாத குப்பலை விரட்டச் சொல்லுங்கள் அதன் பிறகு சிந்திக்கலாம் வாக்கலிப்பதை பற்றி.

    ReplyDelete
  4. கோட் சூட் என்றால் அதற்கு மறுபெயர் பொய்யும் புரட்டும். இப்படியெல்லாம் வாழ நினைக்காதீங்கப்பா.

    ReplyDelete
  5. முஸ்லீங்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் (விதைக்கப்பட்டது) ஆரம்பிக்கப்பட்டது மகிந்த கோத்தா இருவர்களின் ஆசீர்வாதங்களுடன் தான், என்பதை மறுக்க முடியுமா?

    ReplyDelete

Powered by Blogger.