Header Ads



தேர்தலில் யார், வெற்றி பெற்றாலும்...!!


நடைபெறப் போகும் தேர்தல் நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லீம் சமூகத்திற்கும் யார் வெற்றி பெற்றாலும் ஒரு தீர்க்கமான தேர்தலாக அமையவிருக்கின்றது. முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு அரசியல் மூலோபாயம் இல்லாததால், சமூகத்தை வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்வதை நாங்கள் காண்கிறோம். இந்த வேட்பாளருக்கு அல்லது அந்த வேட்பாளருக்கு வாக்களிக்களியுங்கள் என வெவ்வேறு திசைகளில் மக்களைக் குழப்புவதை அவதானிக்கிறோம். 

''குறைந்த தீமையைத் தேர்ந்தெடுப்பதே'' ஒரு மிகப்பெரிய மூலோபாயம் என்ற அளவிற்கு எங்கள் சமூகம் தள்ளப்பட்டிருப்பது உண்மையில் வருத்தமளிக்கிறது, அதேசமயம் நாம் வெவ்வேறு வேட்பாளர்களின் கொள்கைகளைப் பற்றி விவாதித்து, கவனத்திலெடுத்து, நாடு மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்தை முன்னவைத்து தேர்வுகளை எடுக்க வேண்டும். 

உண்மை என்னவென்றால், யார் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் பெரிய வேலை செய்ய வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. யார் அல்லது எந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கப் போகின்றது என்பதை விட இனவெறியை இல்லமால் செய்து அமைதி நேசித்து இன நல்லுறவை வளர்க்கும் மூலோபாய ரீதியான செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளும் வேலை எங்கள் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. 

முதிர்ச்சியடைந்த தொழில் வல்லுநர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் என்ற வகையில், தேர்தல்கள் மற்றும் அதன் முடிவுகளுக்கான நமது எதிர்வினை உணர்ச்சி அல்லது தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் இருந்து விடக்கூடாது, அறிவு, மற்றும் சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். 

நாட்டிற்கு வெளியே வாழும் எங்களுக்கு அல்ஹம்துலில்லாஹ் மிக நிதானமாக சிந்திக்கவும் எமது உறவுகளின் அமைதிக்காக இங்கிருந்து செயல்படுவதட்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. 

இலங்கையில் எங்கள் சகோதர சகோதரிகள் அன்றாடம் பல சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு எம்மாலான உதவிகளை செய்ய​​ நாம் நமது வளங்களையும் தொடர்புகளையும், சுதந்திரங்களையும் பயன்படுத்த வேண்டிய காலமிது.

எனவே அடுத்த ஜனாதித் தேர்தல்களுக்கு முன்னர் இன்ஷா அல்லாஹ், நாம் ஒரு இலக்கை வைத்து முயற்சி செய்ய வேண்டும். 

எங்கள் சமூகத்திற்கான தெளிவான அரசியல் பார்வையையும், மூலோபாய அரசியல் செயற் திட்டங்களையும், வெளிநாடுகளில் உள்ள பிற இலங்கை சமூகங்களுடன் வலுவான உறவுகள் மற்றும் திறந்த உரையாடல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாங்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமைகள் மற்றும் சகவாழ்வை மையமாகக் கொண்ட உறுதியான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இன்னும் பல..

இந்த செயற் திட்டங்கள் பாரிய சவால்கள் மிக்க, பெரிய வேலை ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் அல்லாஹ்வின் உதவியுடன் சாத்தியமாகும். இன்ஷா-அல்லாஹ். 

-முயிஸ் வஹாப்தீன்-

1 comment:

  1. வரவேற்கத்தக்கது. ஆனால் இரு தலைவர்களையும் அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதே முதல் வேலைத்திட்டமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.